
இது பின்னடைவு இல்லை, சீமான் மக்களைச் சிந்திக்க வைத்துள்ளார்,” என்று ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்துப் பேட்டியளித்தபோது நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
“கடந்த தேர்தலைவிட நாம் தமிழர் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இது திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பணம், விலை பேசி மிரட்டி செலுத்தப்பட்ட கள்ள வாக்குகள் அனைத்தையும் கடந்து மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், “இதே நிலை தொடர்ந்தால், 2026 தேர்தலில் திமுக படுதோல்வியைச் சந்திக்கும். எங்களுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாக்குகள் வேறு கட்சிக்கு மாறாது. 2026 தேர்தலில் இந்த மண்ணில் புரட்சி ஏற்படும்.
பெரியாரை விமர்சித்த காரணத்தால் வாக்கு குறையவில்லை. புரிதல் இருப்பவர்கள் மட்டுமே எங்களுக்கு வாக்களித்துள்ளனர். இது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. பணம், அதிகாரத்தைக் கடந்து தனித்து நின்று இவ்வளவு வாக்குகளை வாங்கியுள்ளோம்,” என்று கூறியுள்ளார்.
பகிரவும்: