
03.03.2025
தங்கச்சிமடம்
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கக் கோரி 4வது நாளாக தங்கச்சிமடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவ அமைப்பினருடன் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் இணைந்து வழக்கறிஞர்களை நியமித்து மேல்முறையீடு செய்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
பகிரவும்: