
06.03.2025 – மதுரை
ஓராண்டு செலவு மட்டும் 26 கோடி ரூபாய்!
மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் குடிநீர், கழிப்பறை பயன்பாட்டுக்காக தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால் பற்றாக்குறையால் 45 லோடு லாரிகளில் ரூ.72 ஆயிரம் கட்டணத்தில் தண்ணீர் வாங்கப்படுகிறது.
இங்குள்ள பழைய வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தொட்டி7கள் அமைக்கப்பட்டு மொத்தம் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை தேக்கும் வசதியும் குழாய் இணைப்புகளும் உள்ளன. ஆனால் 6 ஆழ்துளை கிணறுகள் துார்ந்து விட்டன. 3 ஆழ்துளை கிணறுகள் மூலம் 10 சதவீத தண்ணீர் தேவையை கூட பூர்த்தி செய்யமுடியவில்லை. மேலும் அரசு மருத்துவக்கல்லுாரி அருகிலும் எதிரிலும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, தீவிர விபத்து பிரிவு வளாகங்கள் கட்டப்பட்டதால் தண்ணீர் பிரச்னை தலையாய பிரச்னையாக உருவெடுத்தது.
இரண்டாண்டுகளுக்கு முன் ரூ.1.35 கோடி மதிப்பில் வைகையாற்றிலிருந்து (மணலுார் உறைகிணறு பகுதி) தண்ணீரை குழாய் மூலம் பெற்று தெப்பக்குளம் பகுதியில் இருந்து பழைய வளாகத்திற்கு தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் பெற ஏற்பாடு செய்யப்பட்டது.
உறைகிணறு மோட்டார்கள் பழுதடைவதாலும் இணைப்பு குழாய்களில் பிரச்னையாலும் தினமும் தண்ணீர் கிடைப்பதில்லை. இந்நிலையில் கூடுதலாக ஜப்பான் நாட்டு நிதியில் ரூ.313 கோடி மதிப்பில் புதிய அறுவை சிகிச்சை வளாகம் ஆறு மாடியில் கட்டப்பட்டுள்ளதால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது.
பகிரவும்: