
07.03.2025 – சென்னை
பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு பதிலாக ஹிந்தி காலனித்துவத்தை தமிழகம் சகித்துக் கொள்ளாது. இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் ஹிந்தி பேசாதவர்களை மூச்சுத் திணறடிக்கும் அளவுக்கு ஹிந்தி திணிக்கப்பட்டு உள்ளது என தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கு பதில் அளித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக எங்களது ஆன்லைன் கையெழுத்து இயக்கத்திற்கு, 36 மணி நேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் அதிகமான தெரிவித்துள்ளனர் என்பதை முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
எங்கள் கள கையெழுத்து இயக்க பிரசாரமும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெறுகிறது. தமிழக முதல்வராக, நீங்கள் வெளிப்படையாகவே அதிர்ச்சியடைந்ததாகத் தெரிகிறது. எங்களது கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான உங்கள் சவால்கள் ஒரு பயனும் அளிக்காது. தி.மு.க., ஆட்சியில் இருந்தபோதிலும், நீங்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு கையெழுத்து பிரசாரத்தை நடத்த முடியவில்லை.
உங்கள் கட்சியினர் உண்மையை உணர்ந்த பிறகு துண்டுப்பிரசுரங்களை குப்பைத் தொட்டியில் வீசினர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஹிந்தி திணிப்பு கற்பனையின் பெயரில், அட்டை கத்தி வீசுவதை நிறுத்துங்கள். உங்கள் போலி ஹிந்தி திணிப்பு நாடகம் ஏற்கனவே அம்பலமாகிவிட்டது. நீங்கள் இன்னும் அதை உணராதது துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
பகிரவும்: