
14.03.2025 – தேனி
காமயகவுண்டன்பட்டி மேட்டுபட்டிதெரு நாகம்மாள் 65. உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். மனம் வெறுத்து சில தினங்களுக்கு முன் வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட குடும்பத்தினர் கம்பத்தில் மகள் வீட்டில் வைத்திருந்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்து மூதாட்டி மீண்டும் மாயமானார். நேற்று முன்தினம் வீரபாண்டி முல்லை பெரியாறு தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மகன் சிவக்குமார் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி அல்லிநகரம் நேருஜி ரோடு பாப்பம்மாள் 80. உடல் பருமனால் அவதிபட்டு வந்தார். திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று மார்ச் 4ல் வீடு திரும்பியவர் மார்ச் 9ல் வீட்டில் இருந்து மாயமானார். உறவினர்கள் தேடி வந்தார். இந்நிலையில் வீரபாண்டி முல்லை பெரியாறு தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மகள் சங்கீதா புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர். இரு உடல்களையும் போலீசார் மீட்டு விசாரிக்கின்றனர்.
பகிரவும்: