
07.03.2025 – வாஷிங்டன்
விண்வெளிக்கு சென்று தங்கி ஆய்வு செய்ய நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸும், வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதியன்று போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக சென்றனர். ஆனால், இருவரும் 9 மாதங்களாக விண்வெளி நிலையத்திலிருந்து திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனர்.
இதனிடையே, அரசியல் காரணங்களுக்காக, முந்தைய பைடனின் அரசால், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளியிலேயே கைவிடப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், அவர்களை பூமிக்கு அழைத்து வருமாறு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கிற்கு கோரிக்கை விடுத்ததாகவும் கூறியிருந்தார்.
தொடர்ந்து, இதனை ஏற்றுக் கொண்ட எலான் மஸ்க், மார்ச் மாதத்தில் ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ-10 விண்கலத்தில் திரும்ப உள்ளதாக கூறினார்.
இந்த நிலையில், வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு ஆறுதலாக அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது: ‘நாங்கள் உங்கள் மீது அன்பு வைத்துள்ளோம். நாங்கள் உங்களை மீட்பதற்காக வருகிறோம். உங்களை அழைத்து வரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. மிகவும் திறமையற்ற அதிபராக பைடன் இருந்துள்ளார். அவர் இதனை அனுமதித்திருக்கலாம். ஆனால், இந்த அதிபர் அதனை நடக்க விடமாட்டேன், எனக் கூறினார்.
அப்போது, சுனிதா வில்லியம்ஸ் குறித்து பேசிய அதிபர் டிரம்ப், ‘அதிக அடர்த்தியான தலைமுடியுடன் அந்தப் பெண்ணை பார்க்கிறேன். அவரது தலைமுடியை வைத்து எந்த நகைச்சுவையும், விளையாட்டும் இல்லை,’ எனக் கூறியிருந்தார்.
பகிரவும்: