
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகி உள்ள டொனால்ட் டிரம்ப், சீனா, கனடா, மெக்ஸிகோ மீது புதிய வரிகளை விதித்திருக்கிறார். பதிலுக்கு அந்த நாடுகளும் அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளன. இந்தப் போக்கு உலகளாவிய வர்த்தகப் போர்களின் புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இருக்கலாம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% சுங்க வரி விதித்துள்ளார். அதே போல சீனாவுக்கு ஏற்கனவே இருக்கும் வரியில் 10% கூடுதல் வரி விதித்திருக்கிறார். இந்த வரிகள் வரும் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வர உள்ளன.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.
அமெரிக்கா வரிகளை விதிப்பதும், அதற்கு பதிலடியாக சக நாடுகள் வரிவிதிப்பதும் உலகளாவிய வர்த்தகப் போர்களின் புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இருக்கலாம்.
அமெரிக்காவின் வரி மற்றும் அதற்கு பதிலடியாக விதிக்கப்படும் வரி, கார்கள் முதல் உணவு மற்றும் மதுபானம் வரை பல வகையான பொருட்களின் விலைகள் உயர வழிவகுக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆனால், அந்த நாடுகள் பதிலடி கொடுத்தால், வரிகளை மேலும் அதிகரிக்கத் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறி உள்ளார்.
பகிரவும்: