
07.03.2025 – ஜகார்த்தா
இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தா மற்றும் அதனைச் சுற்றி உள்ள நகரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மேற்கு ஜாவா மாகாணத்தில் 24 நகரங்கள், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உள்ளது.
சுகபூமி மாவட்டத்தில் பெய்த கனமழையில் பள்ளிகள், வீடுகள் சேதம் அடைந்தன. குழந்தை உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். பலரை காணவில்லை. மத்திய ஜாவா மாகாணத்தில் கடந்த ஜனவரியில் பெய்த பலத்த மழைக்கு 25 பேர் பலியானது நினைவிருக்கலாம்.
பகிரவும்: