
09.03.2025 – இஸ்லாமாபாத்
சட்டவிரோதமாக குடியேறிவர்களை வெளியேற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வரும் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும் என, பாகிஸ்தான் அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் பல ஆண்டுகளாக தங்கியுள்ளனர். இவர்களில் சிலர் பாகிஸ்தான் குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர்.
வேறு நாடுகளுக்கு இடம்பெற முயன்ற பலர், பாகிஸ்தானில் குடியுரிமை இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவ., 1ம் தேதி முதல், சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளது.
பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் தாங்களாகவே வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் சட்ட விரோதமாக தங்கியுள்ள ஆப்கன் நாட்டு மக்கள் தாங்களாகவே வெளியேறுவதற்காக, வரும் 31ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் இந்த அறிவிப்பால், ஆப்கன் நாட்டு குடியுரிமையுடன் வசித்து வரும் எட்டு லட்சம் பேர் பாதிக்கப்படுவர் என, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பகிரவும்: