
தமிழீழமே எமக்கு வேண்டுமென பயணிக்கும் ஈருருளிப்பயணம் நெதர்லாந்தை ஊடறுத்து பெல்சியம் எல்லையை வந்தடைந்தது
தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணம் 13.02.2025 அன்று பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்து நெதர்லாந்தை வந்தடைந்தது.
14.02.2025 நேற்று முன்தினம் 2 ஆம் நாளில் நெதர்லாந்தில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றம் முன்பாக, கண்டனப் போராட்டத்துடன் ஆரம்பித்து, மக்கள் உணர்வெழுச்சியுடன் ஈருருளிப்பயணம் நடைபெற்று ,மாலை றொட்ராம் மாநகரில் நிறைவடைந்தது.
இன்று (16.02.2025 ) ஜெனிவா நோக்கிய ஈருருளிப்பயணத்தின் 4 ஆம் நாள் அறவழிப்போராட்டம் பிறேடா மாநகரிலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமான நிலையில் இன்று மதியம் அளவில் நெதர்லாந்தை ஊடறுத்து பெல்சியம் எல்லையை வந்தடைந்தது.





பகிரவும்: