வெனிசுலாவுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்கவும்: இந்திய மத்திய அரசு அறிவுறுத்துகிறது

அமெரிக்காவுக்கு போதை பொருட்களை கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீது அமெரிக்க படையினர் நேற்று அதிகாலை தாக்குதலை தொடங்கினர். மேலும், அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

மதுரோவை சிறை பிடித்த படத்தை சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார். வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறை பிடித்து ஏற்றிச் சென்ற விமானம் நியூயார்க்கில் தரையிறங்கியது. இந்நிலையில் வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வெனிசுலாவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அங்கு தேவையில்லாமல் வெளியில் செல்லாதீர்கள். cons.caracas@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்புக்கொள்ளலாம்.

அவசர தொலைபேசி எண் +58-412-9584288-ஐ தொடர்புகொள்ளலாம். கராகஸில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். தூதரக அதிகாரிகள் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வார்கள். இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு