பேருந்தை கவனயீனமாக செலுத்திய வழக்கில்; பேருந்து சாரதியொருவருக்கு ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை.

ஓடுவதற்கு தகுதியற்ற இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பேருந்தை குறுகிய வீதியில் கவனயீனமாக செலுத்தி நபரொருவரின் மரணத்திற்கு காரணமான வழக்கில், கெபித்திகொல்லாவ டிப்போவைச் சேர்ந்த பேருந்து சாரதியொருவருக்கு ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் ரூ.15,000 அபராதமும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் நஷ்டஈடும் செலுத்துமாறு கெபித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், குறித்த சாரதியின் ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!