பூஸா சிறைச்சாலையில் திடீர் சோதனையில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “மன்னா ரமேஷ்” என்பவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் புதன்கிழமை (21-01.2026) கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, “மன்னா ரமேஷ்” என்பவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டில் இருந்து 1 கிரொம் ஹெரோயின் போதைப்பொருள், கையடக்கத் தொலைபேசிகள், 2 சிம் அட்டைகள், டேட்டா கேபிள் மற்றும் கையடக்கத் தொலைபேசி சார்ஜர் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு