கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்.

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் சனிக்கிழமை (24-01-2025) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்;

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிவந்துகொண்டிருந்த டிப்பர்வாகனம் எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த கூலர் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

சுதந்திரத்தை விரும்புவோருக்கு, உறுதியே வலிமையான ஆயுதம் – தமிழீழ தேசியத் தலைவர்

வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தராகப் பதவியேற்றார்.

யானைகள் வேண்டுமென்றே யாழ்ப்பாணத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.