கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை சந்தித்து கலந்துரையாடினார். 

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் செவ்வாய்க்கிழமை (27-01-2026) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை சந்தித்து கலந்துரையாடினார். 

யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் , செயலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கலந்துரையாடலில் தற்போதைய அரசாங்கத்தின் அணுகு முறைகள் , அரசியல் நிலைப்பாடுகள் , எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அறிய முடிகிறது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு