தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.4,800 குறைந்துள்ளது.

சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து, புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 28) ஆபரண தங்கம் கிராம் 15,610 ரூபாய்க்கும், சவரன் 1,24,880 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்
நேற்று (ஜனவரி 29), தங்கம் விலை கிராமுக்கு 1,190 ரூபாய் அதிகரித்து, 16,800 ரூபாயாக விற்பனையானது. சவரனுக்கு, 9,520 ரூபாய் உயர்ந்து, 1,34,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து, 425 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 25,000 ரூபாய் உயர்ந்து, 4.25 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஜனவரி 30) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 4800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 600 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 16,200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை சவரனுக்கு நேற்று 9,520 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு 4800 ரூபாய் குறைந்துள்ளது.

வெள்ளியும் சரிவு
வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 415 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 4 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு நேற்று 25 ஆயிரம் ரூபாய் அதிகரித்த நிலையில், இன்று 10 ஆயிரம் ரூபாய் சரிந்துள்ளது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு