வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு மில்லியன் பண மோசடி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், ஐக்கிய இராச்சியத்தில் வேலை வாங்கித்தருவதாக வாக்குறுதி அளித்து ஒரு மில்லியன் ரூபாயினை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மாத்தறை பிரிவின் அதிகாரிகள், குறித்த நபரை திக்வெல்ல – வெஹெல்ல பகுதியில் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் வெஹெல்ல, உருகமுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு