இன்று இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.84 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.84 லட்சம் கோடி ஒதுக்கீடு.

இதில் பாதுகாப்புப் படையை நவீனப்படுத்துவதற்கு என ரூ.2.19 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பென்சனுக்காக ரூ.1.71 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் , புதிய ஆயுதங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் வாங்குவதற்கான மூலதனச் செலவாக ரூ.2,19 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது நாட்டின் ஜிடிபியில் 11 சதவீதம் ஆகும்.

ரபேல் போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளிட்டவற்றை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ.6.81 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு