உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் தங்கத்தின் விலை 5500 டொலர்களை எட்டி வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருந்தது.

இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (03-02-2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,816 டொலர்களாக பதிவாகியுள்ளது.

அதன்படி, இலங்கையில் 22 கரட் (1 பவுண்) தங்கம்  349,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால் கனடா மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களினால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு