சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.

சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியில் அதிக முதலீடு செய்ததால், அவற்றின் விலைகள் நம் நாட்டில் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வந்தன. கடந்த மாத இறுதியில் இருந்து தங்கம், வெள்ளி விலைகள் சற்று குறைந்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 31) ஆபரண தங்கம் கிராம் 14,900 ரூபாய்க்கும், சவரன் 1,19,200 ரூபாய்க்கும் விற்பனையாகின.

வெள்ளி கிராம், 320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று (பிப்ரவரி 02) தங்கம் விலை கிராமுக்கு 950 ரூபாய் குறைந்து, 13,950 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 7,600 ரூபாய் சரிவடைந்து, 1,11,600 ரூபாய்க்கு விற்பனையானது.வெள்ளி கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

கிலோவுக்கு 20,000 ரூபாய் சரிவடைந்து, 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 03) 22 காரட் ஆபரண தங்கம் விலை 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 3 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 2 லடசத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு