சென்னையில் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.2,560 உயர்வு!

சென்னை: சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் கடந்த வாரம் உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை, சில தினங்களாக குறைந்தது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 13,950 ரூபாய்க்கும், சவரன், 1,11,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று காலை தங்கம் விலை, கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 14,030 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 1,12,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் குறைந்து, 280 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 20,000 ரூபாய் சரிவடைந்து, 2.80 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

மாலை மீண்டும் தங்கம் விலை, கிராமுக்கு 240 ரூபாய் உயர்ந்து, 14,270 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,920 ரூபாய் அதிகரித்து, 1,14,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 300 ரூபாய்க்கு விற்பனையானது.

கிலோவுக்கு, 20,000 ரூபாய் அதிகரித்தது. எனவே, காலை குறைந்த வெள்ளி விலை, மாலை உயர்ந்ததால், மாற்றம் ஏற்படவில்லை. நேற்று தங்கம் மட்டும், சவரனுக்கு 2,560 ரூபாய் உயர்ந்தது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு