களுத்துறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

களுத்துறை, கெலிடோ வீதிப் பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், அப்பகுதியில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனத் தெரியவந்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை (03-02-2026) காலை களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்  போது, 2 கிராம் 452 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த இவர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது, களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் பதிவாகியிருந்த பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் இவருக்குத் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது.

இதன்போது, சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்டிருந்த 03 ஜோடி காதணிகள் , ஒரு பதக்கம், ஒரு ஜே.பி.எல் (JBL) ஒலிபெருக்கி இயந்திரம் உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்காகவே இத்திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!