இலங்கையில் செவ்வாய்க்கிழமை போதைப்பொருள் சோதனைகளின் போது 809 பேர் கைது!

இலங்கை ஜனாதிபதி தலைமையில் நாடளாவிய ரீதியில் செவ்வாய்க்கிழமை (03-02-2026) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 809 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 816 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, 04 கிலோ 142 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 529 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 930 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 377 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 84413 கஞ்சா செடிகளும், 001 கிராம் குஷ் போதைப்பொருளும், 066 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 342 போதை மாத்திரைகளும், 69 கிலோ 489 கிராம் மதனமோதக மாத்திரைகளும், 437 கிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்களில் 07 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு