தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 28 ஆம் தேதி மதுரைக்கு வர உள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ஜ., – பா.ம.க., – அ.ம.மு.க., – த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணி சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் ஜன., 23ல் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று, தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைத்தார்.

அங்கு பேசிய மோடி, ‘நாங்கள் தமிழ் கலாசாரம் குறித்து, வெறும் வாய்ப்பந்தல் போடுபவர்கள் அல்ல. அதை பாதுகாப்பதில் உறுதிப்பாட்டோடு பணியாற்றி வருகிறோம். முருகனுக்கு விளக்கு போடுவது, விவாதப் பொருளாக ஆக்கப்பட்டது. அப்போது, நம் தலைவர்கள் பக்தர்களின் அதிகாரங்களுக்கும், உரிமைகளுக்கும் குரல் கொடுத்தனர். ஆனால், தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும், ஓட்டு வங்கியை குஷிப்படுத்த, நீதிமன்றத்தையும் கூட விட்டு வைக்காமல் அவமானப்படுத்தினர்’ என்றார்.

அதன் தொடர்ச்சியாக, வரும், 28ம் தேதி மோடி மதுரை வருகிறார். அங்கு நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். முன்னதாக மோடி, திருப்பரங்குன்றம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு