கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக, சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் மூன்று இலங்கை விமானப் பயணிகள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை (05-02-2025) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வெளிநாட்டு சிகரட்டுகள் சுமார் 12.87 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் 61, 42 மற்றும் 18 வயதுடையவர்கள் எனவும், நீர்கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் இன்று அதிகாலை 03.30 மணிக்கு சாஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து, 06 பைகளில் 85,800 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 429 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் 11ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு