வரும் பிப்ரவரி 17ம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த கடந்த 20ம் தேதி துவங்கியது. கவர்னர் தன் உரையை நிகழ்த்தாமல் வெளியேறியதால், அவரது உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதைதொடர்ந்து, 24ம் தேதி வரை சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது. விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், 2026 – 27ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது.

எனவே, நிதி நிர்வாக பணிகளுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதில் அரசு முழு வீச்சில் மேற்கொண்டது. இந்நிலையில் இன்று (பிப் 07) தமிழக இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம் அப்பாவு கூறியதாவது:

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 17ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. அன்றைய தினமே, தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அலுவல் குழு கூடி, சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து, முடிவு செய்யப்படும். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Related posts

“நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை

படிகட்டுகளின் கீழ் பதுங்கும் புதிர்: ஈரான் அணு நிலையம் அருகே நிலத்தடி வளாகத்தை பலப்படுத்துகிறது – செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!