திருச்சி நாதக மாநாடு; வீடுதோறும் சென்று வெற்றிலை பாக்குடன் சீமானின் தாயார் அழைப்பு

திருச்சியில் பிப்.,21ல் நடக்கும் நாம் தமிழர் கட்சி மாநாட்டை ஒட்டி சீமானின் தாயார் அன்னம்மாள் கிராம மக்களிடம் சென்று தேங்காய், பழத்தட்டுடன் வெற்றிலை, பாக்கு மற்றும் மாநாடு நோட்டீசை வைத்து அழைப்பு விடுத்தார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராமம். இங்கு அவரது தாயார் அன்னம்மாள் வசித்து வருகிறார். விவசாய வேலைகளை கவனித்துக் கொண்டு 100 நாள் வேலைக்கும் சென்று வருகிறார்.

இந்நிலையில் பிப்.,21ல் திருச்சியில் நடக்கும் நாம் தமிழர் கட்சி மாநாட்டிற்காக அன்னம்மாள் கட்சியினரோடு அரணையூர் கிராமத்தில் வீடுதோறும் சென்று தேங்காய், பழத்தட்டுடன் வெற்றிலை, பாக்கு வைத்து மாநாடு நோட்டீசை பொதுமக்களுக்கு வழங்கி கண்டிப்பாக மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்; சீமானின் பேச்சை கேட்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு