இன்றைய ராசி பலன் 16 பிப்ரவரி 2026 திங்கள்

தமிழ் நாட்காட்டி பிப்ரவரி  2026
அமாவாசை17-பிப்ரவரி-2026 செவ்வாய்
பௌர்ணமி01-பிப்ரவரி-2026 ஞாயிறு
கார்த்திகை23-பிப்ரவரி-2026 திங்கள்
சஷ்டி விரதம்22-பிப்ரவரி-2026 ஞாயிறு
சங்கடஹர சதுர்த்தி05-பிப்ரவரி-2026 வியாழன்
சதுர்த்தி21-பிப்ரவரி-2026 சனிக்கிழமை
பிரதோஷம்14-பிப்ரவரி-2026 சனிக்கிழமை
  திருவோணம்16-பிப்ரவரி-2026 திங்கள்
மாத சிவராத்திரி15-பிப்ரவரி-2026 ஞாயிறு
ஏகாதசி13-பிப்ரவரி-2026 வெள்ளி
27-பிப்ரவரி-2026 வெள்ளி
அஷ்டமி09-பிப்ரவரி-2026 திங்கள்
24-பிப்ரவரி-2026 செவ்வாய்
நவமி10-பிப்ரவரி-2026 செவ்வாய்
25-பிப்ரவரி-2026 புதன்
அரசு விடுமுறை நாட்கள்01-Feb-2026 Sunday
தைப்பூசம்
திருமண நாட்கள்06-பிப்-2026 வெள்ளிக்கிழமை
தேய்பிறை
08-பிப்-2026 ஞாயிறு
தேய்பிறை
13-பிப்-2026 வெள்ளிக்கிழமை
தேய்பிறை
15-பிப்-2026 ஞாயிறு
தேய்பிறை
16-பிப்-2026 திங்கட்கிழமை
தேய்பிறை
20-பிப்-2026 வெள்ளிக்கிழமை
வளர்பிறை
திருவிழாக்கள்01-பிப்-2026 ஞாயிறு
தைப்பூசம்
15-பிப்-2026 ஞாயிறு
மஹாசிவராத்திரி

மீன ராசி நேயர்களே, குடும்ப பெரியோர்களின் ஆசி கிட்டும். கஷ்டமான காரியங்களை கூட எளிதில் முடிக்க முடியும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரம் சீரான நிலையில் இருக்கும்.

மேஷ ராசி அன்பர்களே,

மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் இருக்கும். மன சஞ்சலம் மாறி மன நிம்மதி ஏற்பட வாய்ப்புண்டு. உங்களை சுற்றி இருப்பவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். குடும்ப நிதி நிலைமை சீரடையும். யாருடைய ஆலோசனைக்கும் செவி சாய்க்க வேண்டாம். பிரியமானவர்களால் சின்ன மனக்கசப்புகள் ஏற்படலாம். குடும்பத்துடன் தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். வாகன பயணங்களில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். எந்த ஒரு விஷயத்திலும் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி தானாக வந்து சேரும். உத்தியோகத்தில் பணிகளை கவனமாக மேற்கொள்ளலாம். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். .
பரிகாரம் : விநாயகரை அருகம்புல் வைத்து வழிப்படவும்
.

ரிஷப ராசி அன்பர்களே,

ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப விவகாரங்களில் அடுத்தவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். உண்ணும் உணவிலும், உபயோகப்படுத்தும் பொருளிலும் கவனம் செலுத்த வேண்டும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் அனுகூலமான பலன் கிட்டும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை அதிகரிக்கும். அடிக்கடி பயணங்களால் உடல் அலைச்சல் உண்டாகும். குடும்ப செலவுகள் பற்றி பெரியதாக கவலைப்பட வேண்டியதில்லை. கணவன் மனைவி மனம் விட்டு பேசுவது நன்மை தரும். கடன்களை அடைத்துவிடவும் வாய்ப்புண்டு. உங்களால் முடியாத விஷயங்களில் தலையிட வேண்டாம். போக்குவரத்தின் போது விழிப்புடன் செயல்பட வேண்டும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் ஏற்படும்.
பரிகாரம் : கிருஷ்ணரை வணங்கி வழிபடவும்.

மிதுன ராசி அன்பர்களே,

மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடிக்க முடியும். பணத்தை விவகாரங்களில் கவனமாக இருக்கவும். அடுத்தவர்கள் செய்யமுடியாத காரியங்களை செய்து காட்ட முடியும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். தெய்வ வழிபாட்டால் விரய செலவுகளை தவிர்க்கலாம். விலகிப்போன சொந்தங்கள் தேடி வருவர். உறவினர்கள் இல்லம் நாடி வருவர். நட்பு வகையில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். கடன் பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக நடந்து முடியும். நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களும் எதிர்பாராத விஷயங்களும் நடக்கக்கூடும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
பரிகாரம் : விநாயகரை அருகம்புல் வைத்து வழிபடவும்.

கடக ராசி அன்பர்களே,

கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதை தனியாளாக நின்று செய்து முடிக்க முடியும். மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் மேலோங்கினாலும், சமரச பேச்சால் நல்ல சூழ்நிலை உருவாகும். வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் வருமானத்திற்கு மீறிய செலவுகள் வரும். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். கணவன் மனைவிடையே விட்டுக்கொடுத்து போகவும். ஒரு சிலருக்கு வீடு மாறுவது குறித்த யோசனை வரும். குடும்பத்தில் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட காரியம் கச்சிதமாக முடியும். முடிந்தவரை அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்
.

சிம்ம ராசி அன்பர்களே,

சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்ற சூழ்நிலை உண்டு. யாருக்காகவும் உங்கள் சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். எதிர்பார்த்திருந்த தனவரவு தானாகவே வந்து சேரும். குடும்ப வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் உங்களுக்கு அனுபவம் தரும் வகையில் இருக்கும். பிரியமானவர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் சில உதவி கேட்டு வருவர். சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டு. திருமண காரியம் கைகூடும். குடும்பத்தில் புதுமையான விஷயங்கள் நடக்கும். குல தெய்வ வழிபாடு சிறக்கும். கடன் தொந்தரவு நீங்கும். பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும். எதிலும் சாதகமான சூழல் உண்டு. கொடுக்கல், வாங்கலில் இருந்த மந்த நிலை மாறும். உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
பரிகாரம் : சூரிய பகவானை வணங்கி வழிபடவும்.

கன்னி ராசி அன்பர்களே,

கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து வருவதற்கான வழிகள் வந்து சேரும். கெடுபலன்கள் குறைந்து நல்ல காரியங்கள் நடக்க துவங்கும். முக்கிய தருணங்களில் முடிவு எடுப்பதில் சிரமம் ஏற்படும். புதிய வாகனங்கள், மனை யோகம் ஏற்படும். உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலைகளில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். உறவினர்களிடம் ஏற்பட்ட பகைமை நிலை மாறும். எதிர்பாராத விதமாக நெருங்கிய உறவினர் தேடி வந்து வேண்டிய உதவிகளை செய்து தருவார். வீண் விவாதங்களை தவிர்க்கவும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : குலதெய்வ வழிபாடு சிறப்பான பலனை தரும்

துலாம் ராசி அன்பர்களே,

துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சில நேரங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். மனதில் உயர்வான எண்ணங்கள் இருக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகமானாலும் கூட அவை அதிர்ஷ்டத்தைத் தருவதாகவே இருக்கும். பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும். வாகனம் யோகம் உண்டு. எதிரிகளின் இன்னல்கள் குறைந்து ஏற்றமான நிலை உண்டாகும். உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. கணவன் மனைவிடையே இருந்த மனக்கசப்பு மாறும். நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பார்த்த காரியம் நிறைவேற சிறிது தாமதம் ஆகும். உங்கள் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவர். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்
.

விருச்சிக ராசி அன்பர்களே,

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, சமூக அந்தஸ்து உள்ளவர்களின் ஆதரவால் நற்பெயர் கிடைக்கும். குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். எதிரிகள் பலமிழந்து போவர். பெற்றோர்கள் அனுசரணையாக இருப்பர். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் எதிர்பார்த்த மன அமைதி கிடைக்கும். கணவன் மனைவிடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். உஷ்ணம் தொடர்பான தொந்தரவுகள் இருக்கும். பெரியோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். திட்டமிட்ட காரியத்தை சிறப்பான முறையில் முடிக்க முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிப்படவும்
.

தனுசு ராசி அன்பர்களே,

தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் தன்னமிக்கை தைரியம் அதிகரிக்கும். எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் மனப்பக்குவம் இருக்கும். குடும்பத்தில் முடிவெடுக்காமல் இருந்த விஷயத்தில் ஒரு சுமுகமான முடிவைக் எடுக்க முடியும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உதவ முன் வருவர். அடுத்தவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. கணவன் மனைவிக்குள் சின்ன மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் நன்மைகளும் ஏற்படும். உங்கள் விருப்பத்துக்கு மாறாக சில காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை முற்றிலும் நீங்கிவிடும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிப்படவும்
.

மகர ராசி அன்பர்களே,

மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல் நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும். உங்களைச் சுற்றிலும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கும். விலகிப்போன சொந்தங்கள் மீண்டும் உங்களை தேடி வருவர். குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். உடன்பிறப்பு வகையில் நன்மை ஏற்படும். வாங்கிய கடன் கொடுப்பதுடன் பிறரிடம் உதவி கேட்காத நிலை ஏற்படும். அந்நிய நபர்களிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது. வாகனத்தில் மெதுவாக செல்லவும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
பரிகாரம் : ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிப்படவும்
.

கும்பம் ராசி அன்பர்களே,

கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்திற்காக எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பொருளாதார நிலை சீராக இருக்கும். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாகத் தொடங்கும். உடல் நலத்தில் சிறிய பின்னடைவு ஏற்பட்டு பின் சீராகும். நண்பர்களுடன் நல்லுறவு ஏற்படும். உங்கள் திட்டங்களை பற்றி விவாதிப்பதை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு இருக்கும். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகை மாறும். குடும்பத்தில் இருந்த சோதனைகள் விலகும். சில நேரங்களில் எதை செய்வது எதை விடுவது என்ற தடுமாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
பரிகாரம் : சாஸ்தாவை வணங்கி வழிபடவும்.

மீன ராசி அன்பர்களே,

மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் ஒரு சில சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது, இருப்பினும் அதை திறமையாக எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். அடுத்தவர்களின் ஆலோசனைகளை அளவோடு எடுத்துக்கொள்ளவும். திட்டமிட்டபடி பயணங்கள் மேற்கொள்ள முடியும். குடும்ப ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். வங்கிகளிடமிருந்து தேவையான நேரத்தில் தேவையான கடன் கிடைக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உடன்பிறப்புகளிடம் விட்டுக் கொடுத்துப் பழகவும். பெற்றோர் வழியிலும், உற்றார், உறவினர் வழியிலும் பிரச்னைகள் ஏற்பட்டு அகலும். மறைமுக எதிரிகள் பலம் குறையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்.


பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026
2026 – பிப்ரவரி மாத ராசி பலன்கள்
விசுவாவசு ஆண்டு தை மாதம் 18ம் தேதி முதல் மாசி மாதம் 16ம் தேதி வரை (01-02-2026 – 29-02-2026)

வாக்கிய பஞ்சாங்கப்படி 01-01-2026 முதல் 29-02-2026 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே உண்மை.


பிப்ரவரி மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு :
பிப்ரவரி 3 புதன் ராகுவுடன் சேர்ந்து கும்ப ராசியில் பயணம் செய்கிறார்
பிப்ரவரி 6 செவ்வாய் மகர ராசியில், சூரியனுடன் இணைகிறார்
பிப்ரவரி 13 சூரியன் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
பிப்ரவரி 17 சுக்கிரன் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ” ஆலந்தூர் ” A. வினோத் குமார், Ph.d Astrology

மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுப்பரில் இருந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உறவினர்கள் ஆதரவு பெருகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் சூழ்நிலை வரும். மனதிற்க்குப் பிடித்தமானவர்களை சந்திக்க நேரிடும். முக்கிய நபர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. குடும்பத்தில் முக்கிய வேலைகளை முடிக்க வேண்டிவரும். பண வரவு ஒரு புறம் இருந்தாலும் செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வரும். உங்களை சுற்றி இருப்பவர்கள் ஒத்தாசையாக இருப்பர். குடும்ப நலனில் கூடுதல் கவனம் செலுத்தவும். கணவன் மனைவிடையே விட்டுக்கொடுத்தல் மிகவும் அவசியம். பெற்றோர்களின் ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்தில் முன்னேற்றம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும். உத்யோகம் தொடர்பாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.

சந்திராஷ்டமம் : 10,11,12 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் பல புண்ணிய காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடத்தும் முயற்சிகள் நிறைவேறும். உங்களின் நிதி நிலை முன்னேற்றம் தரக்கூடியதாக அமையும். உங்கள் எண்ணத்திற்கு ஏற்றபடி எல்லாம் வெகு சிறப்பாக அமையும். உறவினர்கள் மூலம் நன்மைகளை பெற்றிடலாம். குடும்ப எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தாலும் அதை பூர்த்தி செய்ய முடியும். ஓயாத அலைச்சல் காரணமாக உடல் சோர்வு, மனசோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. முக்கிய காரியங்களை தாமதிக்காமல் உடனுக்குடன் செய்து முடிக்கவும். இஷ்ட தெய்வ அருளால், மனதில் நினைத்தது நடக்கும். பணவரவு ஒரு சில தடைக்கு பின் கைக்கு வரும். குடும்பத்தில் தேவையற்ற செலவுகளை முடிந்தவரை தவிர்க்க பார்க்கவும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் வரும். புது வீடு, வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உள்ளது. வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க முடியும். பெற்றோர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கடன் பிரச்சனை ஒரு புறம் இருந்தாலும் பெரியளவில் பாதிக்காது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்க சிறிது தாமதமாகலாம். குடும்பத்துடன் பல முக்கிய இடங்களுக்கு செல்ல வேண்டிவரும். வெளிநாட்டில் வேலை தொடர்பான முயற்சிகளுக்கு வெற்றி பெற வாய்ப்புள்ள காலமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்றம், இரக்கம் இருக்கும்.

சந்திராஷ்டமம் : 12,13,14,15 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் புதிய முயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். குடும்ப வாழ்வில் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். எந்த சூழ்நிலையையும் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். விருப்பங்கள் நிறைவேறும். குலதெய்வ அருள் கிடைக்கும். உடன்பிறப்புகளை அனுசரித்து செல்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு ஒரு தற்காலிக விடிவு பிறக்கும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருப்பது முக்கியம். உடல் உஷ்ண சம்பந்தமான தொந்தரவுகள் இருக்கும். வீண் செலவுகளில் பணம் விரயமாகும். தூரத்து பயணங்களின் போது கவனமுடன் இருக்கவும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கைத் தரும். எந்த செயலையும் நேர்த்தியுடன் செய்ய முடியும். உங்களை சுற்றி இருப்பவர்கள் எப்போதும் பாராட்டி பேசுவர். புது வீடு வாங்கும் எண்ணம் மேலோங்கும். அடிக்கடி பயணங்களும், அலைச்சல்களும் தவிர்க்க முடியாது. குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. கணவர் மனைவிடையே கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். சொந்த பந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். மனதில் பழைய நினைவுகள் தொந்தரவு தரும். வாகன பயணங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.

சந்திராஷ்டமம் : 15,16,17 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். உங்களுக்கு எதிராக சில எதிர்ப்புகள் இருந்தாலும் அதை சமாளிக்க முடியும். குல தெய்வ வழிபாடு சிறப்பை தரும், மனம் மற்றும் பண கஷ்டத்தை சீக்கிரத்தில் போக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டு. எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். உடல் நலனிலும் கவனமாக இருத்தல் அவசியம். சிறு விஷயங்களுக்காகக்கூட அதிக அலைச்சலும், முயற்சியும் தேவைப்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் ஒருவரால் மன நிம்மதி பாதிக்கப்படும். பண வரவுகள் சுமாராக இருக்கும். உறவினர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். குடும்ப பிரச்னை சுமூகமான தீர்வு பெறும். அனாவசியமாக யாருக்கும் வாக்குறுதிகள் கொடுத்து பிரச்சனையில் சிக்கி கொள்ள வேண்டாம். வெளி இடங்களில் குடும்ப விவகாரங்கள் பற்றி பேசாமல் இருக்கவும். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. கணவன் மனைவிடையே ஒற்றுமை நிலவும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கவும். வேலை மாற முயற்சி செய்யக்கூடியவர்களுக்கு முயற்சிகள் நல்ல வாய்ப்பை பெற்றுத் தரும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரிய வரும்.

சந்திராஷ்டமம் : 17,18,19 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். திட்டமிட்ட காரியத்தை சிறப்பான முறையில் செய்து முடிக்க முடியும். பொருளாதார பிரச்சனைகள் தீரும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. எதிலும் பொறுமை நிதானம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்து போகவும். வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களிடையே ஒற்றுமை ஓங்கும். திருமண காரியம் கைகூடும். புதிய முயற்சிகளுக்கு, மிகவும் சாதகமான மாதம் இது. அதிக அலைச்சலும், வெளியூர்ப் பயணங்களும் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். குடும்ப விவகாரங்களில் கவனத்துடன் இருப்பது ரொம்ப அவசியம். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம். பிரிந்து சென்ற உறவினர்கள் உங்களை நாடி வருவர். நெருக்கமானவர்களின் சந்திப்பு மனதிற்கு புத்துணர்ச்சி தரும். குடும்ப தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். உடல் நலம் சிறப்படையும். உடன்பிறப்புகளிடையே இருந்த சண்டை சச்சரவு நீங்கும். குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். பெரியோர்களின் ஆலோசனைகளும் உதவியும் உறுதுணையாக இருக்கும். குடும்பத்தில் தங்களின் மதிப்பும், மரியாதையும் தானாகவே உயரும். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். .

சந்திராஷ்டமம் : 19,20,21 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப வாழ்க்கையில் சுவாரசியமான விஷயங்கள் நடக்கும். மனோபலம் அதிகரிக்கும். ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். தடைகள் பிரச்னைகள் குறைந்து எளிதாக எதுவும் நடக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். உடன்பிறப்புகள் மனக்கசப்புகள் இருந்தாலும் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. உங்கள் அறிவுத்திறன் வெளிப்படும். எதிரிகளால் சிறுசிறு பிரச்னைகள் வந்து நீங்கும். நீண்ட நாட்களாக வங்கியில் கடன் பெற முயற்சிப்பவர்களுக்கு கடன் கிடைக்கும். குடும்ப வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். சிலருக்கு, வீடு மாற்றத்திற்கு வாய்ப்பு உள்ளது. தர்ம காரியங்களுக்கு நிறைய செலவழிக்க வேண்டி இருக்கும். எந்த ஒரு முக்கிய காரியங்களுக்கும் அவசரம் காட்ட வேண்டாம், பொறுமையாக காத்திருக்கவும். பணம் விஷயத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். பயணங்களால் மன நிம்மதியும் அதன் மூலம் அனுகூலமான பலன்களும் கிடைக்கும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் கைகூடி வரும். அடுத்தவர்கள் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். கணவர் மனைவிடையே கருத்துவேற்றுமைகள் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகளில் இழுபறி நிலை நீடிக்கும். பெரியோர்களின் ஆசி கிட்டும். ஒரு சிலர் பழைய தீர்க்க முடியாத பிரச்சனைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். நீண்ட நாளாக வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். புது தொழில் யோகம் அமையும்.

சந்திராஷ்டமம் : 21,22,23 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் கடினமான உழைப்புக்கு தக்க சன்மானம் கிடைக்கும். இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் விலகும். எதிலும் சுயமாக சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் வளைந்து கொடுத்துச் போவது நல்லது. ஏற்றத்தாழ்வு இருந்தாலும் தேவைக்கேற்ப பொருளாதார நிலை இருக்கும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்னைகள் உண்டாகும். வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். குடும்ப வாழ்வில் சிறுசிறு தடைகள் பிரச்னைகள் இருந்தாலும் சமாளித்து விட முடியும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. உங்களின் நிதி தொடர்பான வாய்ப்புகள் வலுவாக இருக்கும். குடும்பத்தில் லேசான சலசலப்புகள் தோன்றும். மனப்பிரச்னைகள் விலகும். சில நேரங்களில் நீங்கள் நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் கிட்டும். நெருங்கிய நண்பர்களால் ஒரு சில இடையூறுகள் வர வாய்ப்புண்டு. குடும்பத்தில் சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும். குடியிருக்கும் வீட்டினில் சில மாற்றங்கள் செய்ய வேண்டிவரும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். உறவினர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். திருமண காரியம் கைகூடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். முடிந்த வரை இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் விரும்பிய இட மாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

சந்திராஷ்டமம் : 23,24,25,26 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் வரவும் செலவும் சமமாகவே இருக்கும். வெளியிடங்களில் உங்கள் பேச்சுக்கு நல்ல மதிப்பு இருக்கும். பொருளாதாரநிலை தேவைக்கு ஏற்ப இருக்கும். தேவையற்ற மனக்கவலையை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும் முயற்சிகளில் சிறு தடைகள் இருந்தாலும் விடா முயற்சியால் ஜெயிக்க முடியும். அண்டை அயலார் உதவிகரமாக இருப்பர். உற்றார், உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வீடு வாகனம் தொடர்பான செலவினங்கள் உண்டு. நண்பர்களால் ஆதாயம் உண்டு. சுபச் செலவுகள் அதிகரிக்கும். பிரச்னைகள் பல வந்தாலும் மனத் துணிவுடன் சமாளிக்க முடியும். உடல் நலனிலும் கவனமாக இருத்தல் அவசியம். அதிக அலைச்சலும், உடல் உழைப்பும் சோர்வை ஏற்படுத்தும். உங்களை சுற்றி இருப்பவர்களின் மத்தியில் மதிப்பு உயரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். பெரியோர்கள் ஆலோசனை கை கொடுக்கும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். மறைமுக எதிரிகளின் தொல்லை குறையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. நண்பர்களிடம் வரம்பு மீறி செல்ல வேண்டாம். ணவர் மனைவியிடையே நல்ல ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். அத்தியாவசியத் தேவைகளுக்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

சந்திராஷ்டமம் : 26,27,28 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகமாகவே இருக்கும். எண்ணிய எண்ணங்கள், நீண்ட நாள் ஆசைகள் விடாமுயற்சியால் நிறைவேறும்.எத்தனை தடைகள் வந்தாலும் அதை எல்லாம் வென்று வெற்றி பெற முடியும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். குலதெய்வ அனுகூலம் உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வீண் விரயங்கள் மருத்துவ செலவினங்கள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை தோன்றும். எதிர்பாராத செலவுகள் உண்டானாலும் வீட்டினில் புதிய பொருட்கள் சேரும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம். நீண்ட நாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வரும். நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். பிரியமானவர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. கடன் சுமைகள் இப்போது பாதியாக குறையும். மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். வீட்டிற்கும் தேவையான பொருட்களை வாங்க முடியும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை திரும்ப பெற முடியும். வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

சந்திராஷ்டமம் : 1,2 & 28 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் அனுபவ அறிவை கொண்டு பல காரியங்களில் ஜெயிக்க முடியும். மனதில் புதிய நம்பிக்கை வளரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் நிறைவு ஏற்படும். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் தற்போது கை வந்து சேரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உற்ற நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும் எதிரிகளால் பிரச்னை வந்தாலும் சமாளித்து விட முடியும். உங்கள் திறமைக்கு ஏற்ற சவால்களை சந்திக்க நேரிடும். புத்தி சாதூர்யத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் பல தரப்பட்ட இடையூறுகளை சமாளிக்க வேண்டிவரும். உங்களுடைய காரியங்களை எல்லாம் வெற்றிகரமாக முடிக்க முடியும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். உடன் பிறந்தவர்களுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி ஏற்படும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டு. பயணங்களின் போதும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. கடன் தொந்தரவு அவ்வப்போது இருக்கும். பெற்றோர்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொது பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். சொத்து தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். குடும்பத்தில் தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் முன்னேற்றமும், லாபத்திற்கான வாய்ப்புகளையும் பெற்றிடலாம்.

சந்திராஷ்டமம் : 2,3,4,5 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் சக்திக்கு மீறிய, வாக்குறுதிகளை யாருக்கும் தர வேண்டாம். பிறருக்காக ஜாமீன் கையெழுத்து போடுவது, போன்ற தவறுகளைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். திருமண தொடர்பான காரியங்களை தள்ளி போடுவது நல்லது. வெளியூர்ப் பயணங்களின்போது, எச்சரிக்கையாக இருக்கவும். அதிக அலைச்சலும், ஆரோக்கியக் குறைவும் ஏற்பட வாய்ப்புள்ளது..உங்கள் மனதை பல நாட்களாக வாட்டி கொண்டு இருந்த விஷயங்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். உங்களை சுற்ற இருப்பவர்களின் நலனில் அக்கறை எடுத்து கொள்வது முக்கியம். பிறர் செய்யத் தயங்கும் செயல்களைக் கூட தைரியமாக எடுத்து செய்ய முடியும். விஐபிகளின் அறிமுகமும், அரவர்களால் நன்மையும் உண்டாகும். உடல் நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நேரம். சொத்துக்களில் நிலவிய பிரச்சனைகள் இழுபறியில் நீடித்து இருக்கும். பெற்றோர்கள் வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். கணவன் மனைவிடையே அடிக்கடி ஈகோ பிரச்சனை வந்து போகும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கொடுக்கல், வாங்கலில் தற்காலம் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் பல நன்மைகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.

சந்திராஷ்டமம் : 5,6,7 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களை சுற்று இருப்பவர்களால் நன்மை வந்து சேரும். மனதில் துணிச்சல், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட, அதிக முயற்சியும், அலைச்சலும் தேவைப்படும். நெருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர ஒற்றுமை பாதிக்கப்படும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்ப நலனுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில், நல்ல வரன் அமையும். நெருக்கமானவர்களின் திடீர் சந்திப்பு மனதிற்கு உற்சாகத்தைத் தரும். பிரியமானவர்கள் உதவிகரமாய் செயல்படுவர். சொத்து விவகாரத்தில் பல இடையூறுகளை சந்திக்க வேண்டிவரும். ஆடம்பர செலவுகள் கூடும். ஏற்கனவே வாங்கிய பழைய கடனை அடைப்பதற்கு சில சந்தர்ப்பங்கள் வரும். குடும்பத்தில் சில எதிர்பாராத சில பிரச்சனைகள் வரும். தேக ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவும். கணவன் மனைவி உறவுகளில் மற்றவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வம்பு, வழக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாகனங்களை ஓட்டும்போது, நிதானமாகவும், கவனமாகவும் இருத்தல் அவசியம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம் : 7,8,9,10 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


Related posts

இன்றைய ராசி பலன் | 15 பிப்ரவரி 2026 ஞாயிறு

இன்றைய ராசி பலன் | 14 பிப்ரவரி 2026 சனி

இன்றைய ராசி பலன் | 13 பிப்ரவரி 2026 வெள்ளிக்கிழமை