சென்னையில் வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு!

சென்னையில் வார தொடக்க நாளான இன்று (பிப்ரவரி 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து , ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து 14,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன. தமிழகத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 14) தங்கம் விலை கிராமுக்கு, 160 ரூபாய் உயர்ந்து, 14,560 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,280 ரூபாய் அதிகரித்து, 1,16,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.நேற்று (பிப்ரவரி 15) தங்கம் விலையில் மாற்றமில்லை.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை 960 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து 14,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

Related posts

தமிழகப் பொருளாதாரத்தில் பிற துறைகளின் வளர்ச்சியால், வேளாண் துறையின் பங்களிப்பும் குறைந்து கொண்டே செல்கிறது.

வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது; பிப்ரவரி 21-22 தேதிகளில் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை திருப்பித் தர அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் ஒப்புக்கொண்டன.