தமிழகப் பொருளாதாரத்தில் பிற துறைகளின் வளர்ச்சியால், வேளாண் துறையின் பங்களிப்பும் குறைந்து கொண்டே செல்கிறது.

தமிழகப் பொருளாதாரத்தில் பிற துறைகளின் வளர்ச்சியால், வேளாண் துறையின் பங்களிப்பும் குறைந்து கொண்டே செல்கிறது.

 தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் பொருளாதாரத்தில் வேளாண் துறையின் பங்களிப்பு குறைந்து கொண்டே வருவதாக தமிழக மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது; 2025-26 ஆண்டுக்கான தமிழக பொருளாதார ஆய்வறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் தொகை என்பது ரீபிளேஷ்மென்ட் அளவுக்கு கீழே சென்றுள்ளது. இதனால், தமிழகத்தில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாகவும் ஆகிக் கொண்டே வரும்.

உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் இரண்டு பங்காக இருக்கிறது. இதன் விளைவாக, மக்கள் தொகை பெருக்கம் குறைந்தது. குழந்தைகள் கல்வி கற்க செல்வதால், சந்தைகளில் வேலை செய்யும் ஆட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால், வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டிய அவசியம் எழுகிறது.

சுயதொழில் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகம், கேரளாவில் தான் தினக்கூலி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதுதான் பிற மாநிலங்களுக்கும், தமிழகத்திற்கும் உள்ள வேறுபாடு. தொழில்துறை வேகமாக வளரும் போது, பொருளாதாரத்தில் வேளாண் துறையின் பங்களிப்பு குறைந்து கொண்டே செல்லும். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் பொருளாதாரத்தில் வேளாண் துறையின் பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது.

தமிழகத்தில் 25 சதவீத மக்களே விவசாயம் தொடர்புடைய பணிகளை செய்கின்றனர். 75 சதவீதம் மக்கள் வேளாண்துறை அல்லாத பணிகளை செய்து வருகின்றனர். இது ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே செல்லும். வளர்ந்த நாடுகளில் 4 அல்லது 3 சதவீதம் பேர் தான் வேளாண் துறையில் இருப்பார்கள். தமிழகத்தில் ஒரு காலத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்த நிலையில், 25 சதவீத மக்களே தற்போது வேளாண் தொழிலில் இருக்கின்றனர். மேலும், பிற துறைகளின் வளர்ச்சியால், வேளாண் துறையின் பங்களிப்பும் குறைந்து கொண்டே செல்கிறது.

பிற மாநிலங்களை எடுத்துக் கொண்டால், மக்கள் அதே துறையில் தான் இருப்பார்கள். ஆனால், அதன் பங்களிப்பு குறையும். இதன் காரணமாக வறுமை ஏற்படும். ஆனால், நிறைய பேர் வேறு தொழில்களுக்கு நகர்ந்து செல்கின்றனர்.

கடந்த நிதியாண்டில் தமிழகம் வளர்ச்சி 11.3ஆக அதிகரித்துள்ளது. பிற மாநிலங்களைக் காட்டிலும் அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக நாடுகள் 3 சதவீதமும், இந்தியா 7 சதவீதம் வளர்ச்சியடைந்த நிலையில், தமிழகம் 11.3 சதவீதமாக வளர்ந்துள்ளது. இதற்கு உற்பத்தி மற்றும் தொழில்துறை தான் முக்கிய பங்காற்றியுள்ளது. உற்பத்தித்துறை 14 சதவீதம் பங்களித்துள்ளது. உலகம் முழுவதும் தோல் அல்லாத காலணிக்கு ஒரு தேவை உள்ளது, தமிழ்நாட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறது

தொழில்துறை மிக வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. நான்கைந்து ஆண்டுகளில் பிரமாண்டமாக வளர்ச்சி. முன்பு உதிரிபாகங்கள் வெளிநாடுகளில் இருந்து வரும். அதனை ஒருங்கிணைக்கும் பணிகளை மட்டுமே செய்து வந்தோம். தற்போது, உதிரிபாகங்கள் இங்கேயே உற்பத்தி செய்ய ஆரம்பித்து விட்டதால், அதன் மதிப்புக்கூட்டு தன்மை அதிகரிக்கிறது. உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீண்ட கடற்கரை இருக்கும் போதும், கப்பல் கட்டும் தொழில் வளரவே இல்லை. தற்போது, அதற்கான பெருமுயற்சி எடுக்கும் போது, தமிழகம் மற்றும் குஜராத்தை தேர்வு செய்கின்றனர். கடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க தென்கொரிய நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தத் தொழிலின் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்பு உருவாகும். இதற்கு மத்திய அரசு ஊக்கம் கொடுத்துள்ளது.

வேளாண்துறையைப் பொறுத்தவரையில் காலநிலை மாற்றம் பெரும் சவாலாக இருக்கிறது. வேளாண் துறையில் உற்பத்தி திறன் அதிகரித்திருந்தாலும், அதன் வளர்ச்சி தேக்க நிலையை அடைந்துள்ளது. பிற மாநிலங்களைக் காட்டிலும் சமூகத்துறைக்கு தமிழகம் அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளது. சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி கைகொடுக்காத நிலையில், நிலக்கரி மின் உற்பத்தியையே அதிகளவில் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. எனவே, பகலில் சோலார் மூலம் உருவாகும் மின்சாரத்தை பேட்டரி மூலம் சேமித்து, மாலையில் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பிரிட்டன் அரசு கடும் ஆன்லைன் பாதுகாப்பு நடவடிக்கைகள்: சமூக ஊடகங்கள் மற்றும் AI தளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

உக்ரைன் போரில் உயிரிழந்த வடகொரியா படைவீரர்களுக்காக புதிய வீடுகள் திறப்பு: பியோங்க்யாங்கின் பங்கு குறித்து புதிய கேள்விகள்

ஈகியர் வணக்க நிகழ்வு 2026 பிரித்தானியா