ஈரான் போரின் எதிரொலி: இந்தியா முழுவதும் சிலிண்டர் விலைகள் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளன.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் போர் தொடுத்தள்ளது. இதனால் உலகம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. போர் காரணமாக கச்சா வினியோகம் தடைபட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் சிலிண்டர் விலை, நள்ளிரவு முதல் உயர்வு கண்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.115 ம், 14.2 கிலோ எடை கொண்ட, வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ. 60ம் உயர்ந்தது.

புதிய விலையின்படி சென்னையில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர், ரூ.928.50 க்கும், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர், ரூ. 2043.50 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

“சீமைக்கருவேல் மரங்களை அகற்ற தமிழக அரசு பல ஆண்டுகளாக ஒரு குழுவை அமைத்தும், அதில் கவனம் செலுத்தப்படவில்லை” – ம.தி.மு.க பொதுச் செயலாளர்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தொகுதிகளில், திமுக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 11,000க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து 20 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ஈரானிய போர்க்கப்பலின் வேண்டுகோளின் பேரில் இந்தியா அதற்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியுள்ளது.