ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் அடித்ததால், இந்தியா முதல் இன்னிங்ஸில் 198 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ஒரே ஒரு பகலிரவு டெஸ்டில் பங்கேற்கிறது. பெர்த்தில் துவங்கிய இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (4) ஏமாற்றினார். ஷைபாலி வர்மா (35) ஓரளவு கைகொடுத்தார். பிரதிகா ராவல் (18), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (19), தீப்தி சர்மா (7), ரிச்சா கோஷ் (11) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் (52) அரைசதம் கடந்தார். ஸ்னே ராணா (5), சயாலி (7), கிராந்தி (1) சொப் ரன்னில் அவுட்டாகினர்.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. காஷ்வீ கவுதம் (34*) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் அனாபெல் 4, லுாசி ஹாமில்டன் 3, டார்சி பிரவுன் 2 விக்கெட் கைப்பற்றினர்.

பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜார்ஜியா (2), லிட்ச்பீல்டு (9), கேப்டன் அலிசா ஹீலி (13) ஏமாற்றினர். ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 96/3 ரன் எடுத்திருந்தது. எல்லிஸ் பெர்ரி (43), அனாபெல் (20) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் சயாலி 2, கிராந்தி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Related posts

ஈரான் போரின் தாக்கம்: பாகிஸ்தான் முழுவதும் எரிபொருள் நிலையங்களில் பரபரப்பு, மக்கள் பதட்டம் அதிகரிப்பு

கேப் டவுன் ‘குற்றச் சுவர்’: நவீன பிரிவினை என மக்கள் கொந்தளிப்பு

பெக்கா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் வான் தாக்குதல்: குறைந்தது 41 பேர் பலி — லெபனான் சுகாதார அமைச்சகம்