பாலசுப்பிரமணியம் பேரின்பதாசன் (அப்பு) 28.02.2026

by
0 comments

பாலசுப்பிரமணியம் பேரின்பதாசன் (அப்பு)

தோற்றம் 22.06.1961 | மறைவு 28.02.2026


பாலசுப்பிரமணியம் பேரின்பதாசன் (அப்பு) கோயிற்குடியிருப்பு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் பேரின்பதாசன் அவர்கள் கடந்த (28.02.2026) சனிக்கிழமை இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் இராஜலட்சுமி (சேமன் கோபால்) தம்பதியின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகரத்தினம் (உடுப்பிட்டி) – நகுலேஸ்வரி தம்பதியின் அன்பு மருமகனும்,

நந்தாவதியின் (நந்தா) அன்புக் கணவரும்,

ஜனார்த்தன் (பிரான்ஸ்), சரணியா (ஜேர்மனி), தயானா (கனடா), ஹரிஈசன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான குகதாசன் (பாபு- மட்டுவில்), சிறிஸ்கந்ததாசன் (ஜேர்மனி) மற்றும் கற்பகவல்லி (ஜேர்மனி) றஞ்சினி (ஜேர்மனி), காலஞ்சென்ற குகனேசன் (சுதுமலை) மற்றும் மோகனதாஸ் (கனடா), சகலகலாவல்லி (லண்டன்), கலைவாணி (ஜேர்மனி), கிருஷ்ணதாசன் (ஜேர்மனி), குகலோகநாதன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

திலகவதி (உடுப்பிட்டி). குலேந்திரன் (ஜேர்மனி), கிருபாநந்தன் (லண்டன்), குகதாசன் (உடுப்பிட்டி), பிறேமாவதி (லண்டன்) காலஞ்சென்றவர்களான கமலாவதி, நகுலன், மற்றும் ரூபவதி (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டர்சனா (பிரான்ஸ்), முகுந்தன் (ஜேர்மனி), துசிகரன் (கனடா), சோபிகா (பிரான்ஸ்), ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அதிஷ்ரா(பிரான்ஸ்), மாயோன் (ஜேர்மனி), சதுசன் (கனடா), அதிசயா (பிரான்ஸ்), ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (10.03.2026) செவ்வாய்க்கிழமை முற்பகல் 8.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காகக் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்
விநாசித்தம்பி வீதி,
கோவிற்குடியிருப்பு,
சாவகச்சேரி.

மனைவி 077 173 1871 | மகன் 074 090 4557

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00