உத்தரப்பிரதேசத்தில் 38 வயதுடைய ஒரு பெண்ணும் அவரது மகளும் கொலை

Arrested on several charges

போலீசார் வந்து பார்த்த போது, அந்த வீட்டில் இருந்த, 38 வயது பெண்ணும், அவரின் மகளான சிறுமியும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்த தீபக் பகதுார் என்ற நேபாள நாட்டைச் சேர்ந்தவரை காணவில்லை.

இதனால் அவரை உ.பி. போலீசார் தேடினர். அவர் புதுடில்லி ரயில் நிலையம் பகுதியில் சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்தது. டில்லி போலீசார் உதவியை உ.பி. போலீசார் நாடினர்.

அதன் படி டில்லி போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், தீபக் பகதுார் என்ற அந்த நேபாள நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை உ.பி. போலீசார் வசம் டில்லி போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.

Related posts

டெல்லியில் இருந்து மான்செஸ்டருக்குச் சென்ற இண்டிகோ விமானம் திடீரென வான்வெளி மூடப்பட்டதால் டெல்லிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கேரளாவின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும் கல்வியாளருமான “கே.என். பணிக்கர்” காலமானார்.

டெல்லியில் உள்ள உத்தம் நகர் சம்பவம் தொடர்பாக நேற்று ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.