டெல்லியில் உள்ள உத்தம் நகர் சம்பவம் தொடர்பாக நேற்று ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

டில்லி உத்தம்நகர்சம்பவம் தொடர்பாக நேற்று ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, இந்த வழக்கில் கைதானோர் எண்ணிக்கை, 14 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இளைஞர் கொலை தொடர்பாக, உத்தம்நகரில், எம்.சி.டி., அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வசித்த வீடு, இடித்து அகற்றப்பட்டது.

கடந்த, 4ம் தேதி நாடு முழுவதும், ஹோலி பண்டிகை நடந்தது. அப்போது, தென் மேற்கு டில்லி மாவட்டத்தின் உத்தம் நகர் பகுதியில் ஒரு வீட்டில், 17 வயது சிறுமி பறக்க விட்ட வண்ண நீர் நிரம்பிய பலுான், பக்கத்து வீட்டில் இருந்த, ஹோலி பண்டிகை கொண்டாடாதோர் இருந்த வீடு மீது விழுந்து, அதிலிருந்த வண்ண நீர், சாய்ரா என்ற பெண் மீது விழுந்தது.

இதில், அந்த பெண் கொதித்து எழுந்தார். அந்த வழியாக வந்த, 27 வயது இளைஞரை அந்த பெண்ணின் உறவினர்கள், அடித்து கொன்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, அந்த பகுதியில் அன்றே போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும், அனைவரையும் கைது செய்ய வேண்டும் என ஹிந்து அமைப்புகள் கூறின.

இந்நிலையில், சாய்ரா என்ற அந்த பெண் உள்ளிட்ட, ஏழு பேர்ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், இளைஞரை அடித்து கொன்றது தொடர்பாக, இரண்டு சிறார்கள் உள்ளிட்ட, ஏழு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, இளைஞர் படுகொலை தொடர்பாக இதுவரை, 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் துருவி துருவிவிசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, உத்தம்நகர் சம்பவம் தொடர்பாக, ஹோலி பண்டிகை கொண்டாடாத அந்த பிரிவினர் வசித்த, கட்டடத்தை போலீசார் துணையுடன், எம்.சி.டி., அதிகாரிகள் நேற்று முன்தினம் இடித்தனர்.

நீர் நிலையில் அந்த கட்டடம் இருந்ததாக கூறி, அந்த கட்டடத்தை அதிகாரிகள் இடித்தனர். துதொடர்பாக, முன் கூட்டியே நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கப்பட்டதா என அதிகாரிகளிடம் நிருபர்கள் கேட்ட போது,’எல்லா கட்டடங்களும், கட்டப்படும் முன், டில்லி மாநகராட்சியில் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு, இல்லாத கட்டடங்கள், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இடிக்கப்படும். இந்த விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்ற கட்டாயம் இல்லை’ என்றனர்.

Related posts

டெல்லியில் இருந்து மான்செஸ்டருக்குச் சென்ற இண்டிகோ விமானம் திடீரென வான்வெளி மூடப்பட்டதால் டெல்லிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கேரளாவின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும் கல்வியாளருமான “கே.என். பணிக்கர்” காலமானார்.

உத்தரப்பிரதேசத்தில் 38 வயதுடைய ஒரு பெண்ணும் அவரது மகளும் கொலை