சிறுவர் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் மூன்றாவது விருப்ப நெறிமுறையை உறுதி செய்ய வேண்டும்.

சிறுவர் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் தொடர்பாடல் நடைமுறை குறித்த மூன்றாவது விருப்பத்தேர்வு நெறிமுறையை (CRC-OP3) அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துள்ளது.

1996 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் பிரகாரம் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் பிரகடனங்களுக்கு அமைவாக இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகள் உள்ளடங்கலாக மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் என்பன தொடர்பில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குவதற்குத் தமக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஆணையின் அடிப்படையில் இப்பரிந்துரையை முன்வைந்திருப்பதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறுவர் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் தொடர்பாடல் நடைமுறை குறித்த மூன்றாவது விருப்பத்தேர்வு நெறிமுறையை அங்கீகரிப்பதன் ஊடாக சிறுவர் விவகாரம் சார்ந்த நீதிக்கான அணுகல் வலுப்படுத்தப்படும் எனவும், சிறுவர்களின் உரிமைகள் மீறப்படும்போது அவற்றுக்கான தீர்வைத் துரிதமாகப் பெறுவதற்கு இது பெரிதும் உதவும் எனவும் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்நெறிமுறையை அங்கீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சுக்கும், அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

காபூல் மருத்துவமனை வெடிப்பு குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுப்பு

மத்திய கிழக்கு பதற்றத்திலும் உக்ரைனில் கவனம் தளரக்கூடாது: ஸ்டார்மர்

விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை – மேதகு