தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவுள்ள 60 சுங்கச்சாவடிகளின் பட்டியலை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 6,600 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள், அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள், அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், பயணியர் வாகனங்கள் உள்ளிட்டவை பயணித்து வருகின்றன. இச்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக, 2024 – 25ம் ஆண்டு, 4,300 கோடி ரூபாய் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

நடப்பாண்டு, 4,100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொப்பூர் சுங்கச்சாவடியில், 275 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும், 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஏப்., 1ம் தேதி முதல், தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த சுங்கச்சாவடிகள் பட்டியலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது.

மாவட்டம்சுங்கச்சாவடி அமைவிடம்
விழுப்புரம்மொரட்டாண்டி
வேலூர்பள்ளிகொண்டா
திருப்பத்தூர்வாணியம்பாடி
கோவைகணியூர்
கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி
செங்கல்பட்டுபரனூர்
விழுப்புரம்ஆத்தூர்
சென்னைமாத்தூர்
திருவள்ளூர்நல்லூர்
சென்னைசூரப்பட்டு
சென்னைவானகரம்
காஞ்சிபுரம்ஸ்ரீபெரும்புதூர்
திருவண்ணாமலைசென்னசமுத்திரம்
திருவள்ளூர்எஸ்.வி.புரம்
திருவள்ளூர்பட்டரைபெரும்புதூர்
திருச்சிகல்லக்குடி
அரியலூர்மணகெதி
செங்கல்பட்டுகருங்குழி
விழுப்புரம்நங்கிளி கொண்டான்
திருவண்ணாமலைகரியமங்கலம்
கிருஷ்ணகிரிநாகம்பட்டி
கிருஷ்ணகிரிகரகத்தஹள்ளி
கடலூர்கொத்தட்டை
விழுப்புரம்கெங்கராம்பாளையம்
விழுப்புரம்சேலியமேடு
கள்ளக்குறிச்சிகீழ்குப்பம்
கடலூர்பொன்னலகரம்
வேலூர்வல்லம்
திருவண்ணாமலைஇனம்கரியாந்தல்
விழுப்புரம்தென்னமாதேவி
கிருஷ்ணகிரிகதவணி
திருப்பூர்வேலம்பட்டி
கோவைமதுக்கரை
தர்மபுரிபுதுப்பட்டி
திருப்பூர்பொங்கலூர்
திருச்சிவாழவந்தான்கோட்டை
மதுரைகப்பலூர்
விருதுநகர்எட்டூர்வட்டம்
தூத்துக்குடிசாலைபுதூர்
திருநெல்வேலிநாங்குனேரி
புதுக்கோட்டைபூதக்குடி
மதுரைசிட்டம்பட்டி
புதுக்கோட்டைலெட்சுமணப்பட்டி
புதுக்கோட்டைலெம்பாலக்குடி
சிவகங்கைகோடிகோட்டை
ராமநாதபுரம்வெண்ணாத்தூர்
புதுக்கோட்டைபழைய கந்தர்வகோட்டை
சிவகங்கைசெண்பகம்பேட்டை
சிவகங்கைதிருபாச்சேத்தி
ராமநாதபுரம்போகலூர்
திருநெல்வேலிவாகைகுளம்
கன்னியாகுமரிதிருப்பதிசாரம்
தேனிஉப்பார்பட்டி
திண்டுக்கல்சத்திரபட்டி
தூத்துக்குடிபுதூர்பாண்டியபுரம்
திருவாரூர்கோவில்வேணி
தஞ்சாவூர்வேம்புகுடி
தஞ்சாவூர்மாணம்பாடி
மதுரைஎலியார்பத்தி
திண்டுக்கல்புதூர்

Related posts

பனங்காடு பாலத்தடியில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம் காண அக்கரைப்பற்று பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சென்னையில் இன்று (மார்ச் 18) 22 காரட் தங்க நகைகளின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 640 குறைந்தது.

காபூல் மருத்துவமனை வெடிப்பு குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுப்பு