‘மனித பாப்பிலோமா வைரஸ்’ பரவுவதைத் தடுப்பதற்காக இலவச தடுப்பூசித் திட்டத்தின் மூலம் மூன்று லட்சம் சிறுமிகள் பயனடைந்துள்ளனர்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும் எச்.பி.வி., எனப்படும், ‘மனித பாப்பிலோமா வைரஸ்’ பாதிப்பை தடுக்க மத்திய அரசு துவங்கிய இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் இரு வாரங்களில் மூன்று லட்சம் சிறுமியர் பயனடைந்துள்ளனர்.

நாடு முழுதும், 14 வயது சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இலவச தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி பிப்., 28ல் ராஜஸ்தானில் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், ‘கார்டசில் 4’ என்ற தடுப்பூசி ஒருமுறை செலுத்தப்படுகிறது. இது, கர்ப்பப்பை வாய் புற்று நோயை உண்டாக்கும் எச்.பி.வி., வைரஸ் வகைகளை தடுக்கிறது. மத்திய அரசின் இந்த திட்டத்தை ஐ.நா., சபை பாராட்டியுள்ளது.

இதற்கான தடுப்பூசி முகாம் அரசு சுகாதார மையம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடக்கிறது. கடந்த இரு வாரங்களில் மூன்று லட்சம் சிறுமியர் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை இலவசமாக பெற்று பயனடைந்துள்ளனர்.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பெண்களிடையே பொதுவாக காணப்படும் கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க, ‘கார்டசில் 4’ தடுப்பூசி முக்கிய பங்காற்றுகிறது. இந்த தடுப்பூசி முகாம்களில் தமிழகம், மத்திய பிரதேசம், ஆந்திரா, குஜராத், ஒடிஷா, மிசோரம் ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.

தற்போது பல பகுதிகளில் பள்ளி தேர்வு நடைபெற்று வந்தாலும், தடுப்பூசி முகாமுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தேர்வுகள் முடிந்ததும் இந்த முயற்சி மேலும் வேகமடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

வான்வழி கட்டுப்பாடுகள் நீடித்தாலும், ஐந்து சிறப்பு விமானங்களில் 1,600‑க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாய்நாட்டுக்கு திரும்பினர்

இன்றைய இந்திய வானிலை நிலவரம்

எரிவாயு சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை இல்லை: இந்திய மத்திய அரசு மீண்டும் தெளிவுபடுத்துகிறது!