சென்னையில் இன்று (மார்ச் 18) 22 காரட் தங்க நகைகளின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 640 குறைந்தது.

இன்று (மார்ச் 18) சென்னையில், 22 காரட் தங்க நகைகளின் விலை ஒரு சவரனுக்கு ரூ.640 குறைந்து, ரூ.1,16,560-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கான விலை ரூ.80 குறைந்து, ரூ.14,570-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்துள்ளனர். இதனால், நம் நாட்டில் அதன் விலை குறைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,760 ரூபாய்க்கும், சவரன், 1,18,080 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 280 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று முன்தினம் (மார்ச் 16), தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் குறைந்து, 14,710 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 400 ரூபாய் சரிவடைந்து, 1,17,680 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு நான்கு ரூபாய் குறைந்து, 276 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 4,000 ரூபாய் சரிவடைந்து, 2.76 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்றைய நிலவரம்

நேற்று (மார்ச் 17) தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் குறைந்து, 14,650 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 480 ரூபாய் சரிவடைந்து, 1,17,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

அதேசமயம், வெள்ளி கிராமுக்கு, நான்கு ரூபாய் உயர்ந்து, 280 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 4,000 ரூபாய் அதிகரித்து, 2.80 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்றைய நிலவரம்

இந்நிலையில் இன்று (மார்ச் 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் சரிந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 14,570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 1,520 ரூபாய் குறைந்துள்ளது.

வெள்ளியும் சரிவு

வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்து ஒரு கிலோ 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

இஸ்ரேல்: “ஈரானிய உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப்பை நாங்கள் கொன்றோம்” — இரண்டு நாட்களில் இது மூன்றாவது இலக்குத் தாக்குதல்.

WHO‑வில் இருந்து அர்ஜென்டினா விலகல் உறுதி; “சுகாதார இறையாண்மை” காரணம் என மிலே அரசு விளக்கம்

பனங்காடு பாலத்தடியில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம் காண அக்கரைப்பற்று பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.