Monday | March 23, 2026

இன்றைய ராசி பலன் 23 மார்ச் 2026 திங்கட்கிழமை

0 comments
தமிழ் நாட்காட்டி மார்ச் 2026
அமாவாசை18-மார்ச்-2026 புதன்கிழமை
பௌர்ணமி03-மார்ச்-2026 செவ்வாய்கிழமை
கார்த்திகை23-மார்ச்-2026 திங்கட்கிழமை
சஷ்டி விரதம்24-மார்ச்-2026 செவ்வாய்கிழமை
சங்கடஹர சதுர்த்தி06-மார்ச்-2026 வெள்ளிக்கிழமை
சதுர்த்தி22-மார்ச்-2026 ஞாயிறு
பிரதோஷம்01-மார்ச்-2026 ஞாயிறு
16-மார்ச்-2026 திங்கட்கிழமை
30-மார்ச்-2026 திங்கட்கிழமை
திருவோணம்15-மார்ச்-2026 ஞாயிறு
மாத சிவராத்திரி17-மார்ச்-2026 செவ்வாய்கிழமை
ஏகாதசி5-மார்ச்-2026 ஞாயிறு
29-மார்ச்-2026 ஞாயிறு
அஷ்டமி11-மார்ச்-2026 புதன்
26-மார்ச்-2026 வியாழன்
நவமி12-மார்ச்-2026 வியாழன்
27-மார்ச்-2026 வெள்ளிக்கிழமை
அரசு விடுமுறை நாட்கள்19-மார்ச்-2026 வியாழன்
உகாதி தெலுங்கு வருடப் பிறப்பு

21-மார்ச்-2026 சனிக்கிழமை
ரமலான் பண்டிகை

31-மார்ச்-2026 செவ்வாய்
மஹாவீர் ஜெயந்தி
திருமண நாட்கள்05-மார்ச்-2026 வியாழன்
தேய்பிறை

06-மார்ச்-2026 வெள்ளிக்கிழமை
தேய்பிறை

08-மார்ச்-2026 ஞாயிறு
தேய்பிறை

15-மார்ச்-2026 ஞாயிறு
தேய்பிறை தேய்பிறை

16-மார்ச்-2026 திங்கட்கிழமை
தேய்பிறை தேய்பிறை

25-மார்ச்-2026 புதன்கிழமை
வளர்பிறை
திருவிழாக்கள்02-மார்ச்-2026 திங்கட்கிழமை
மாசிமகம்

03-மார்ச்-2026 செவ்வாய்
ஹோலிப் பண்டிகை

14-மார்ச்-2026 சனிக்கிழமை
காரடையான் நோன்பு

19-மார்ச்-2026 வியாழன்
உகாதி தெலுங்கு வருடப் பிறப்பு

27-மார்ச்-2026 வெள்ளிக்கிழமை
ஸ்ரீ ராமநவமி

இன்றைய ராசி பலன் 23 மார்ச் 2026 திங்கட்கிழமை

மேஷ ராசி அன்பர்களே,

மேஷ ராசி நேயர்களே, நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பிரியமானவர்கள் அன்பு மழைப் பொழிவர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

ரிஷப ராசி நேயர்களே,

ரிஷப ராசி நேயர்களே, நல்ல மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மிதுன ராசி அன்பர்களே,

மிதுன ராசி நேயர்களே, தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு வரும். சொந்த பந்தங்கள் ஆதரவாக இருப்பர். எதிரிகள் காணாமல் போவர். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

கடக ராசி நேயர்களே,

கடக ராசி நேயர்களே, அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். நண்பர்களுக்கு பண உதவி செய்ய நேரிடும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

சிம்ம ராசி நேயர்களே,

சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

கன்னி ராசி நேயர்களே,

கன்னி ராசி நேயர்கர்கள், எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். ஆவணங்களை கவனமாக கையாளவும். வீண் அலைச்சலால் உடல் சோர்வு வரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

துலாம் ராசி நேயர்களே,

துலாம் ராசி நேயர்களே, பொருளாதார நிலை சீரான வளர்ச்சி காணும். பிரபலங்கள் அறிமுகமாவர். இரவு நேர வாகன பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே,

விருச்சிக ராசி நேயர்களே, சுற்று வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். முன் கோபத்தை குறைக்கவும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிக்க முடியும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.

தனுசு ராசி நேயர்களே,

தனுசு ராசி நேயர்களே, குலதெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். உடல் நலம் சீராகும். முடிந்து போன விஷயங்களை பற்றி யோசிக்க வேண்டாம். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும்.

மகர ராசி நேயர்களே,

மகர ராசி நேயர்களே, வேண்டியவர்கள் உதவி கரம் நீட்டுவர். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

கும்ப ராசி நேயர்களே,

கும்ப ராசி நேயர்களே, நாடி வந்தவர்களுக்கு வேண்டியதை செய்து தர இயலும். மனவலிமை கூடும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மீன ராசி நேயர்களே,

மீன ராசி நேயர்களே, புது பொருள் சேர்க்கை உண்டாகும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

தமிழ் ராசி பலன் வாரந்தோறும் 23-03-2026 To 29-03-2026

மேஷ ராசி அன்பர்களே

மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப எதிர்ப்புகளை எதிர்கொண்டு அதில் வெற்றி காண முடியும். மனதில் நினைத்த காரியம் நடக்கும். பயணங்களால் அதிக நன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு கூடும். எதையும் சிந்தித்து செயல்படுவதால் நல்லது. நட்பு வழியில் சில பிரச்சனைகள் வரும். யாரிடமும் வீண் வாதம் செய்ய வேண்டாம். முக்கிய நிகழ்சிகளில் கலந்துகொள்ள முடியும். எந்த ஒரு பிரச்னையானாலும் சுமூகமாக கையாளவும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும். கொடுக்கல், வாங்கல் திருப்தியாக இருக்கும். மற்றவர்களை நம்பி எந்த ஒரு காரியத்திலும் இறங்க வேண்டாம். குடும்ப பெரியோர்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். புது தொழில் யோகம் அமையும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

ரிஷப ராசி அன்பர்களே

இந்த வார பலன்படி, புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உங்களது நேர்மையான செயல்களால் பலரது பாராட்டை பெற முடியும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் தன்மையாக பேசி பழகுவது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகமாகும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குடும்ப சிக்கல்கள், பிரச்சனைகள் போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்

மிதுன ராசி அன்பர்களே

இந்த வார பலன்படி, குடும்பத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் குறைய தொடங்கும். மன நிம்மதிக்காக தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளவும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். குடும்பத்தில் புது திட்டங்கள் சம்பந்தமாக நிறைய நபர்களை சந்திக்க வேண்டியிருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கூடும், பல பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்கள் செயல்களில் ஒவ்வொன்றிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்ப நபர்களை அனுசரித்து போவது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் சின்ன கருத்து வேறுபாடு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : மஹாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்

கடக ராசி அன்பர்களே

இந்த வார பலன்படி, குடும்ப விஷயங்களில் இருந்த தொய்வு நீங்கும். வேண்டியவர்களிடம் அனுசரித்து போவது பல வகையிலும் நல்லது. உங்களிடம் அபரிதமான திறமை இருக்கும். குடும்பத்தில் செலவுகள் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே இருக்கும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். குடும்பத்தில் சந்தோஷ தருணங்கள் ஏற்படும். மனதில் தெளிவு நிலை உண்டாகும். பொறுப்பாக செய்யும் காரியங்களால் உங்களின் மரியாதை அதிகரிக்கும். கணவன் மனைவிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். பயணங்களால் செலவுகளும் அலைச்சல்களும் ஏற்படும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் வெகுவாக உயரும். தேவையில்லாத விஷயங்களில் ஆர்வம் காட்டாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்

சிம்ம ராசி அன்பர்களே

இந்த வார பலன்படி, எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் செய்து முடிக்கும் சாமர்த்தியம் இருக்கும். குடும்பத்திற்கு எதிராக இருந்த எதிர்ப்புகள் குறையும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் இருந்த மனஸ்தாபம் நீங்கும். இக்கட்டான சூழலில் நண்பர்கள் உதவ முன்வருவர். உற்றார், உறவினர்களிடம் அனுசரணையாக இருக்கவும். குடும்ப பெரியோர்களிடம் மனக்குறைகளை சொல்லவும். எதிர்பாராத பல செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிரியமானவர்களின் ஆதரவு பெருகும். முடிந்த வரை வெளியில் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. பெண்கள் மூலம் சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். உத்யோகத்தில் வேலை பளு குறையும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்

கன்னி ராசி அன்பர்களே

இந்த வார பலன்படி, குடும்பத்தில் பல புதிய திட்டங்கள் போட முடியும். மனதில் உயர்வான எண்ணங்கள் உதிக்கும். உங்களுக்கு எதிராக வந்த எதிர்ப்புகள் கூட தானே விலகும். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செய்வது சிறப்பு. பண வரவு வெளியில் சொல்லும்படி சுமாராக இருக்கும். புது நண்பர்களின் அறிமுகம் ஆதாயம் தரும். உறவினர்களோடு சுமுக உறவு ஏற்படும். குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடன் தொந்தரவு இருக்கும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை உற்சாகம் தரும். நீண்ட நாட்கள் முடியாமல் இருந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் மேல் அதிகாரி ஆதரிப்பார். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
பரிகாரம் : ஸ்ரீ சாய்பாபாவை வழிபடவும்

துலாம் ராசி அன்பர்களே

இந்த வார பலன்படி, குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும். எந்த காரியங்களில் ஈடுபட்டாலும் மன தடுமாற்றம் இல்லாமல் இருப்பது நல்லது. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். குடும்பத்திற்கு பல எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். வரவேண்டிய நிலுவை பணம் கைக்கு வந்து சேரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள், தகவல்கள் வந்து சேரும். பெற்றோர்கள் வழியில் நிறைய நன்மைகள் உண்டு. குடும்ப ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். அத்தியாவசிய தேவைக்காக கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். வழக்கு, விவகாரங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் இருந்த சிக்கல் தீரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்

விருச்சிக ராசி அன்பர்களே

இந்த வார பலன்படி, குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்படும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் அனைத்தும் ஜெயிக்கும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் மருத்துவ செலவுகள் அவ்வப்போது வந்து போகும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். வாகன பராமரிப்பு செலவு கூடும். உடல் நலனில் அக்கறைகொள்ளவும். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் கைகொடுப்பர். எத்தனை இடையூறுகள் வந்தாலும் புத்திசாலித்தனத்தால் அதை எதிர்த்து போராட முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்

தனுசு ராசி அன்பர்களே

இந்த வார பலன்படி, உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் வெகுவாக பாராட்டுவார். திட்டமிட்ட பயணங்களை மேற்கொள்ள முடியும். யோகா, தியானத்தில் மனம் ஈடுபாடுகொள்ளும். குடும்பத்தில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். மற்றவர்களிடம் அனுசரித்து போவதால் மட்டுமே பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முடியும். நெருங்கிய உறவினர்களால் தேவையில்லாத மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். திருமணம் காரியம் விரைவில் கைகூடும். தேவையில்லாத மனக்கவலையால் மன சஞ்சலம் வரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : சாஸ்தாவை வணங்கி வழிப்படவும்

மகர ராசி அன்பர்களே

இந்த வார பலன்படி, எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மிகுதியாக இருக்கும். வாழ்க்கை தரம் படிப்படியாக மாறும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். குல தெய்வ வழிபாடு சிறக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். புது நட்பு வட்டாரம் உருவாகும். நெருங்கிய உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். பயணங்களில் போது கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் குறை இருக்காது. சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்கவும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரமப்பட்டே முடிக்க வேண்டியதிருக்கும். உத்யோகத்தில் தனி திறமை வெளிப்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
பரிகாரம் : குல தெய்வத்தை வணங்கி வழிபடவும்.

கும்ப ராசி அன்பர்களே

இந்த வார பலன்படி, உங்கள் அனுபவ அறிவை கொண்டு நிறைய சாதிக்க முடியும். குடும்ப பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனதில் பல கவலைகள் இருந்தாலும் அதை பற்றி எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம். உடல் சோர்வு நீங்கி உற்சகம் ஏற்படும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்க்கவும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பல நல்ல செயல்கள் காரணமாக சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பாராத சில பயணங்களால் உடல் அலைச்சல் ஏற்படும். உங்கள் திட்டங்களை பற்றி வெளியில் விவாதிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஆனந்தமும் குதூகலமும் நிலவும். தடைபட்ட சில காரியங்கள் தடையின்றி இனிதே நடைபெறும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
பரிகாரம் : கால பைரவரை வணங்கி வழிபடவும்

மீன ராசி அன்பர்களே

இந்த வார பலன்படி, கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் நிறைய சிரமம் இருக்கும். மனதில் இனம்புரியாத கவலைகள் அவ்வப்போது வந்துபோகும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பிரியமானவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் மனமகிழ்ச்சி ஏற்படும். அண்டை, அயலாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பிறர் கைவிட்ட காரியத்தை திறம்பட செய்ய முடியும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும்கணவன் மனைவிடத்தில் சுமுக உறவு காணப்படும். பாலிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடவும்


மார்ச் மாத ராசி பலன்கள் 2026

மார்ச் மாத ராசி பலன்கள் 2026
(2026) – மார்ச் மாத ராசி பலன்கள்

விசுவாவசு வருடம் மாசி மாதம் 17ம் தேதி முதல் பங்குனி மாதம் 17ம் தேதி வரை (01-03-2026 – 31-03-2026)

வாக்கிய பஞ்சாங்கப்படி 01-03-2026 முதல் 31-03-2026 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் திசை, புத்தி, அந்தரம் மற்றும் கோச்சாரம் கணக்கிட்டு பார்க்கும் போது ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும், இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே உண்மை.

மார்ச் மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு :
06.03.2026- மீன சனி
15.03.2026 – மீன சூரியன்



ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஆலந்தூர் A.வினோத் குமார் (Ph.d Astrology)

மேஷ ராசி அன்பர்களே

மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம் உண்டு. நீண்ட நாள் எண்ணங்கள், திட்டங்கள் நிறைவேறும். பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகும். மன சங்கடங்கள் நாளடைவில் தீரும். பல முக்கிய சவால்களையும், விவாதங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எப்போதும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவைகள் பூர்த்தியாகும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர்களிடம் சின்ன சின்ன சின்ன மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரிய செலவுகள் அதிமாகும். எதையும் திட்டமிட்டு செயல்படுவது எல்லா வகையிலும் சிறப்பு. உடல் உபாதைகள் நீங்கும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். அடிக்கடி பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பிரபலங்களின் அறிமுகவும், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். கணவன், மனைவிக்கிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். புது முயற்சிகளை சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லது. இது வரை தடைப்பட்டு வந்த காரியங்களை மீண்டும் தொடங்க முடியும். உத்யோக மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

சந்திராஷ்டமம் : 9,10,11 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.


ரிஷப ராசி அன்பர்களே

ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு வெகுவாக உயரும். இனிமையான பேச்சின் மூலம் பலரது ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். எவ்வளவு சம்பாதித்தாலும் அது போதாமல் வெளியில் கைமாற்ற பணம் வாங்க வேண்டியிருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் கூட சீக்கிரத்தில் முடிவடையும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். குடுமபத்தில் புது நபர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோசனையை சற்று தள்ளி வைப்பது நல்லது. பெற்றோர்களின் ஆலோசனைகள் உதவியாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கும் ஏற்படும். பல நாட்களாக திட்டமிட்டு இருந்த தெய்வ வழிபாட்டை தவறாமல் மேற்கொள்ளவும். உடல் நலத்தை பொறுத்தவரை எந்த தொந்தரவும் இருக்காது. உங்கள் முக்கிய காரியங்கள் நாளடைவில் நிறைவேறும். உத்யோகத்தில் இருந்த தடைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.

சந்திராஷ்டமம் : 11,12,13,14 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.


மிதுன ராசி அன்பர்களே

மிதுன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்பத்தில் வரும் இன்னல்களை சமாளிக்க முடியும். எதிர்பார்க்கும் காரியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். மனம் மகிழ்ச்சியில் துள்ளும். போதிய வருமானம் தங்கு தடையின்றி கிடைக்கும். உங்களது அன்றாட பணிகளை காலம் தாழ்த்தாமல் செய்யவும். மனம் விரும்பிய பொருட்களை வாங்க முடியும். தெய்வ காரியங்களில் நாட்டம் உண்டாகும். குடும்பத்தினருடன் சென்று பிராத்தனையை செய்யவும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். வேண்டியவர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். குடும்ப செலவுகளை கட்டுப்படுத்த சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப வர தாமதமாகும். வெளியில் யாரை நம்புவது என்ற குழப்பம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிரியமானவர்கள் வழியில் சில அனுகூலமான பலன் உண்டு. நண்பர்கள் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். எதிலும் பதற்றமடையும் போக்கை கைவிட்டு நிதானமாக நடந்துகொள்ள பழகவும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். .

சந்திராஷ்டமம் : 14,15,16 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.


கடக ராசி அன்பர்களே

கடக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீங்கள் எதிர்பார்த்ததும், எதிர்பார்காததும் இரண்டுமே சீக்கிரத்தில் நடந்து முடியும். பல நாட்களாக இழுபறியில் இருந்த பணம் கூட கைக்கு வந்து சேரும். தெய்வ வழிபாடு மூலம் நல்லது நடக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சில நேரங்களில் திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். நட்பு வழியில் ஆதாயம் உண்டு. சொத்து விவகாரங்களில் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்கவும். வீண் வாக்குவாதங்களை முடிந்தவரை தவிர்க்கவும். குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிவரும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நல்லது. அடிப்படை தேவைகள் அதிகரிக்கும். குடும்ப நபர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பர். குடியிருக்கும் வீட்டை மாற்ற நேரிடும். பழைய கடனை அடைக்க புது வழி கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய சொந்தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. புது தொழில், யோகம் அமையும்.

சந்திராஷ்டமம் : 16,17,18 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.



சிம்ம ராசி அன்பர்களே

சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்பத்தில் பல வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் அதை சிரமம் இன்றி சமாளிக்க முடியும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே நடக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். தன்னம்பிக்கையும், மன தைரியம் அதிகரிக்கும். குடும்ப சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. புது நண்பர்கள் அறிமுகமாவர். உற்றார், உறவினர்கள் மூலம் சிக்கலும், பண விரயமும் வர வாய்ப்புண்டு. புதிய வண்டி, வாகனங்களை வாங்க முடியும். குடும்ப நபர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். கிடைக்க வேண்டிய நல்லது அனைத்தும் ஒவ்வொன்றாக கிடைக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி கலகலப்பு ஏற்படும். பல நாட்களாக தடைபட்ட திருமணம் விரைவில் கைகூடும். கடன் சுமைகள் பாதியாக குறையும். உடன்பிறப்பு வகையில் ஆதரவும் கூடும். உங்கள் அன்றாட வரவு செலவு கணக்குகளை தினசரி சரி பார்க்கவும். வெளிநாடு செல்லாதவர்க்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். பழமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். அடிக்கடி பயணங்கள் மூலம் நற்பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

சந்திராஷ்டமம் : 18,19,20,21 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.


கன்னி ராசி அன்பர்களே

கன்னி ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, உங்கள் விருப்பங்களை எதுவாகினும் அது நிறைவேற்ற வழி கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். முன் கோபத்தை கட்டுப்படுத்தினால் பல வகையில் நன்மை உண்டாகும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்த நிறைய சந்தர்ப்பங்கள் வரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். புதிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். உடலுக்கு ஒவ்வாத உணவுகளை எடுத்து கொள்ள வேண்டாம். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். திருமண காரியம் கைகூடும். கடன் பிரச்னையை ஓரளவு சமாளிக்க முடியும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். வருமானத்திற்கு மீறிய செலவுகள் இருப்பதால் அனாவசிய செலவுகளை அறவே தவிர்க்கவும். தூரத்து பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

சந்திராஷ்டமம் : 21,22,23 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.


துலாம் ராசி அன்பர்களே

துலாம் ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாக்கு சாதுரியம் ஏற்படும். மனக்கவலைகள் அடியோடு மறையும். குடும்பத்தில் முக்கிய விசேஷங்கள் நடக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க பழகவும். தெய்வ வழிபாட்டின் மூலம் பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முடியும்.வாகன யோகம் உண்டு. நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியம் நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். நண்பர்கள் கேட்ட உதவியை செய்து தருவர். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வேண்டாதவர்கள் சிலர் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாற வேண்டிவரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எடுத்த வேலைகளை சிறப்பான முறையில் செய்து முடிக்க முடியும். உத்தியோகத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

சந்திராஷ்டமம் : 23,24,25 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ, செய்யவோ வேண்டாம்.


விருச்சிக ராசி அன்பர்களே

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, உங்களால் சுற்றி இருப்பவர்கள் பயனடைவர். எல்லா விஷயத்திலும் பொறுமையை கடை பிடிக்க வேண்டியது அவசியம். மனதில் ஒரு விதமான குழப்பங்கள் நிலவினாலும் அது நாளடைவில் சரியாகிவிடும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. புது வீடு மாற்றம் ஏற்படும். வெளியிடங்களில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். தடைப்பட்ட திருமண பணிகள் மீண்டும் தொடரும். பூர்வ புண்ணிய பாக்கியங்கள் கிட்டும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். குடும்பத்துடன் தூர பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பயணங்கள் தொடர்பாக அலைச்சல், செலவுகள் ஏற்பட்டாலும் மனத்திருப்தி கொள்ளும் வகையில் நற்பலன் உண்டாகும். புது நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் கிட்டும். பெண்கள் வகையில் சில நன்மைகள் உண்டு. உத்யோகத்தில் புது பொறுப்புகள் வரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

சந்திராஷ்டமம் : 25,26,27 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.


தனுசு ராசி அன்பர்களே

தனுசு ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எதிலும் வெற்றியும் சந்தோஷமும் கிடைக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்து வந்தால் உடல் மேன்மை பெரும். வரும் வாய்ப்புகளை சரியான விதத்தில் பயன்படுத்தி கொண்டால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். பண வரவு வெளியில் சொல்லும்படி இருக்கும். உங்கள் கஷ்டங்கள் எல்லாம் விலகி விடும். புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். அடுத்தவர் செய்ய தயங்கும் காரியத்தை கூட தைரியமாக செய்ய முடியும். மற்றவர்களை கவரும் திறமை உங்களிடம் நிறைவே இருக்கும். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவும். ஆன்மீக ஆர்வம் கூடும். கொடுக்கல் வாங்கலில் அவசரம் காட்ட வேண்டாம். புதிதாக ஏதேனும் செய்ய விரும்பினால் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. குடும்ப தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.

சந்திராஷ்டமம் : 27,28,29 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.


மகர ராசி அன்பர்களே

மகர ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மிகுதியாக இருக்கும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எப்போதும் நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியும். வீட்டில் அனாவசிய செலவுகளை குறைக்கவும். குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு நல்ல விதமாக இருக்கும். உங்கள் வித்தியாசமான அணுகுமுறையாலும் சாதுரியமான பேச்சாலும் எதையும் சாதிக்க முடியும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகளை பெருக்கிகொள்ள முடியும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். கடன் பிரச்சனைகள் அவ்வபோது தலைதூக்கும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். வாகன யோகம் உண்டு. எப்போதும் இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

சந்திராஷ்டமம் : 2,3,4 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

கும்ப ராசி அன்பர்களே

கும்ப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்பத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க முடியும். மனம் நிம்மதிக்காக தினமும் தியானம் செய்யவும். இழுபறியில் இருந்த வேலைகளை சீக்கிரத்தில் முடிக்க முடியும். குடும்பத்தில் தவிர்க்க முடியாத அளவிற்கு செலவுகள் வரும். மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். முடிந்தவரை அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் விவகாரங்களில் கவனமாக இருக்கவும். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் தரப்படும். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் குதூகலமும் இருக்கும். திருமணம் காரியம் கைகூடும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. ஒரு சிலர் பூர்விக இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும். வாகனங்களில் செல்லும் போது தொலைபேசியை உபயோகிக்க வேண்டாம். கணவன் மனைவிடையே இணக்கமான போக்கும் காணப்படும். நண்பர்களிடம் உங்கள் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ளவும். பிரியமானவர்கள் ஒத்தாசையாக இருப்பர். குடும்ப நபர்களின் நலனில் அக்கறைகொள்ளவும். உத்யோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம் : 4,5,6 & 31 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

மீன ராசி அன்பர்களே

மீன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீண்ட காலமாக திட்டமிட்டு மேற்கொண்ட முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செய்யவும். எதிர்பாலினத்தவர்களிடம் பேசும் போது கவனம் தேவை. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். சேமிப்பில் கவனம் செலுத்தினால் பல வகையில் நன்மை அடையலாம். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். புது வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டு. குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கைத்துணை வழியில் நற்செய்தி உண்டு. கொடுக்கல் வாங்கலில் சில சிரமங்கள் இருக்கும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து விலகும். பல புண்ணிய காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் கிட்டும். உத்யோகத்தில்அமைதி நிலவும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.

சந்திராஷ்டமம் : 6,7,8,9 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.


Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00