யாழ்ப்பாண மாவட்ட இராணுவத்தினரால் இரத்த தானங்கள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவிய இரத்தத்திற்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக யாழ். மாவட்ட இராணுவத்தினரால் இரத்த தானம் செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டி.சில்வாவின் தலைமையில் , பலாலி இராணுவ வைத்தியசாலை வைத்தியர் பி.எல்.ஏ.ஏ. லெகாம்கேயின் ஒழுங்கமைப்பில் இராணுவத்தினர் இரத்த தானம் செய்தனர்.

இரத்த தானம் செய்வதற்காக 191 இராணுவத்தினர் பதிவு செய்த நிலையில் , 185 பேர் இரத்த தானம் வழங்கினர்.

Related posts

யாழ். கொலை: விரிவுரையாளரின் சடலமானது இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருள்கள் மீட்கப்பட்டன.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி – சரசாலை பகுதியில் நேற்று (21-03-2026) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.