இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் இடையே ஒரு முக்கிய தொலைபேசி உரையாடல் நடைபெற்றது.

இந்த உரையாடலில், குறிப்பாக மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் நிலைமை மற்றும் அதன் விளைவாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்படும் சவால்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டதாக இந்திய பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியா – இலங்கை இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இரு தலைவர்களும் ஆய்வு செய்துள்ளனர். அதேவேளை, பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவும் இலங்கையும் நீண்டநாள் நெருக்கமான மற்றும் நம்பிக்கைக்குரிய நண்பர்கள் எனக் குறிப்பிட்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி, இரு நாடுகளும் பகிர்ந்து கொண்டுள்ள சவால்களை சமாளிக்க ஒன்றிணைந்து செயற்பட உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த தொலைபேசி உரையாடல் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது,

மத்திய கிழக்கில் நிலவி வரும் யுத்தச் சூழல் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று (24-03-2026) மாலை தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடினார். வளர்ந்து வரும் இந்த நிலைமைகள் பிராந்திய மற்றும் உலகளாவிய விநியோக வலையமைப்புகளில் ஏற்படுத்தும் பாதகமான தாக்கங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் இங்கு மிகுந்த கவனம் செலுத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Related posts

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள் ‘பிட்’ வைத்திருந்தாலும், அதை கண்டுபிடித்தாலும் தவறாக முடிவதாக தமிழக தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!

பேரரசுகளின் மீது நெருப்பு: ஈரான், எதிர்ப்பு, மற்றும் மத்திய கிழக்கிற்கான மறைமுகப் போர்