| தமிழ் நாட்காட்டி ஏப்ரல் 2026 | |
|---|---|
| அமாவாசை | 17-ஏப்-2026 வெள்ளிக்கிழமை |
| பௌர்ணமி | 01-ஏப்-2026 புதன்கிழமை |
| கார்த்திகை | 19-ஏப்-2026 ஞாயிறு |
| சஷ்டி விரதம் | 22-ஏப்-2026 புதன்கிழமை |
| சங்கடஹர சதுர்த்தி | 05-ஏப்-2026 ஞாயிறு |
| சதுர்த்தி | 20-ஏப்-2026 திங்கட்கிழமை |
| பிரதோஷம் | 15-ஏப்-2026 புதன் 29-ஏப்-2026 புதன்கிழமை |
| திருவோணம் | 11-ஏப்-2026 சனிக்கிழமை |
| மாத சிவராத்திரி | 15-ஏப்-2026 புதன்கிழமை |
| ஏகாதசி | 13-ஏப்-2026 திங்கட்கிழமை 27-ஏப்-2026 திங்கட்கிழமை |
| அஷ்டமி | 10-ஏப்-2026 வெள்ளிக்கிழமை 24-ஏப்-2026 வெள்ளிக்கிழமை |
| நவமி | 11-ஏப்-2026 சனிக்கிழமை 25-ஏப்-2026 சனிக்கிழமை |
| அரசு விடுமுறை நாட்கள் | 03-ஏப்-2026 வெள்ளிக்கிழமை புனித வெள்ளி 14-ஏப்-2026 செவ்வாய் தமிழ் வருடப் பிறப்பு 14-ஏப்-2026 செவ்வாய் அம்பேத்கர் பிறந்த நாள் |
| திருமண நாட்கள் | 06-ஏப்-2026 திங்கட்கிழமை தேய்பிறை 12-ஏப்-2026 ஞாயிறு தேய்பிறை 13-ஏப்-2026 திங்கட்கிழமை தேய்பிறை 16-ஏப்-2026 வியாழன் தேய்பிறை 20-ஏப்-2026 திங்கட்கிழமை வளர்பிறை 23-ஏப்-2026 வியாழன் வளர்பிறை 30-ஏப்-2026 வியாழன் வளர்பிறை |
| திருவிழாக்கள் | 01-ஏப்-2026 புதன்கிழமை பங்குனி உத்திரம் 14-ஏப்-2026 செவ்வாய் தமிழ் வருடப் பிறப்பு 20-ஏப்-2026 திங்கட்கிழமை அட்சய திரிதியை 21-ஏப்-2026 செவ்வாய் ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி 28-ஏப்-2026 செவ்வாய் மீனாட்சி திருக்கல்யாணம் 30-ஏப்-2026 வியாழன் கள்ளழகர் எதிர்சேவை |
இன்றைய ராசி பலன் 06 ஏப்ரல் 2026 திங்கட்கிழமை
மேஷ ராசி அன்பர்களே,
மேஷ ராசி நேயர்களே, குடும்ப சிக்கல்கள் குறையும். பண விஷயத்தில் கவனம் தேவை. விலகி நின்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
ரிஷப ராசி நேயர்களே,
ரிஷப ராசி நேயர்களே, குடும்ப உறவுகளில் சண்டை சச்சரவுகளை குறைக்கவும். தேவையற்ற செலவுகளை குறைத்துகொள்ளவும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
மிதுன ராசி அன்பர்களே,
மிதுன ராசி நேயர்களே, வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். யாரை நம்புவது என்ற குழப்பம் வரும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கடக ராசி நேயர்களே,
கடக ராசி நேயர்களே, யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். பிரியமானவர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
சிம்ம ராசி நேயர்களே,
சிம்ம ராசி நேயர்களே, கடினமான வேலைகளையும் எளிதாக முடிக்க முடியும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
கன்னி ராசி நேயர்களே,
கன்னி ராசி நேயர்களே, மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். யாருடைய பேச்சுக்கும் செவி சாய்க்க வேண்டாம். கணவன் ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
துலாம் ராசி நேயர்களே,
துலாம் ராசி நேயர்களே, எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். யாரிடத்திலும் விவாதம் செய்ய வேண்டாம். அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயக்கம் வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
விருச்சிக ராசி நேயர்களே,
விருச்சிக ராசி நேயர்களே, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
தனுசு ராசி நேயர்களே,
தனுசு ராசி அன்பர்களே, தடைப்பட்ட காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். உடல் நலத்தில் கவனம் தேவை. சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மகர ராசி நேயர்களே,
மகர ராசி அன்பர்களே, சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் வீட்டாரின் ஆதரவு பெருகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
கும்ப ராசி நேயர்களே,
கும்ப ராசி அன்பர்களே, விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். வெளி நபர்களை அதிகம் நம்ப வேண்டாம். திட்டமிட்ட பயணங்கள் தாமதமாகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
மீன ராசி நேயர்களே,
மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். பயணங்கள் அனுகூலமான திருப்பங்களை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
தமிழ் ராசி பலன் வாரந்தோறும் 06-04-2026 To 12-04-2026
மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புது முயற்சிகளில் ஆர்வம் அதிகம் இருக்கும். சுபகாரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். திட்டமிட்ட பயணங்கள் சாதகமான பலனை தரும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். பிரபலங்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் போகவும். வழக்கு, விவகாரங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. குடும்ப நபர்களிடம் அனுசரித்து போவது எல்லா வகையிலும் நல்லது .வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. தேவையில்லாத மனக்கவலையால் மன சஞ்சலம் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.
பரிகாரம் : திருத்தணி முருகரை வணங்கி வழிபடவும்.
ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எல்லா விஷயத்திலும் சிந்தித்து நிதானமாக செயல்படுவது நல்லது. வாக்கு வன்மையால் எதையும் சாதிக்க முடியும். குடும்பத்தில் இருப்பவர்களால் சில நேரங்களில் நிம்மதிக் குறைவு உண்டாகலாம். சுற்றி இருப்பவர்களை யாரை நம்புவது என்ற குழப்பம் வரும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளையும் சாப்பிட வேண்டாம். குடும்பத்தினருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். கணவன், மனைவிடையே பனிப்போர் ஏற்படும். குடும்பத்திற்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்.
மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் கூட ஒதுங்கியே நிற்பர். குடும்பத்தில் சாதகமான சூழ்நிலை இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் எந்த தொந்தரவும் இருக்காது. பயணங்கள் மனதுக்கு திருப்தி தரும். புது நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். மற்றவர்கள் பிரச்னையில் அனாவசியமாக தலையிட வேண்டாம். குடும்பத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேற்றுமைகள் வரும். உடன்பிறப்புகளிடம் நல்ல ஒற்றுமை இருக்கும். எந்த முயற்சி மேற்கொண்டாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும்.
பரிகாரம் : மகாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்
கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப நலனுக்காக நிறைய உழைக்க வேண்டியிருக்கும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் உங்களுடைய பெரிய பலம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். குடும்பத்தின் தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும். உடல் நலத்தில் கவனம் தேவை. எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும், வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உங்களது நேர்மையான செயல்களால் பலரது பாராட்டு கிடைக்கும். திட்டமிட்டபடி காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். உத்யோகம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிப்படவும்.
சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, ஆன்மிகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடைபெறும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் சில சிரமங்கள் ஏற்படும். வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். வாக்குவாதங்களையும், அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சந்தோஷ தருணங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பழைய சிக்கலை தீர்க்க புது வழி ஒன்று கிடைக்கும். பயணங்களால் வீண் செலவுகளும், அலைச்சல்களும் ஏற்படும். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். தேவையில்லாத காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : ஒரு முறை சூரியனார் கோவில் சென்று வரவும்
கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். மனதில் ஏதாவது ஒரு கவலை இருந்து கொண்டே இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பிரச்னை உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். உற்றார், உறவினர்கள் வழியில் நன்மை வந்து சேரும். வாகனங்களில் செல்லும் போது பொறுமை அவசியம். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்
துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் பேச்சிலும் செயலிலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் இனிதே நடைபெறும். உங்கள் சாமர்த்தியமான பேச்சு முக்கிய சமயங்களில் கை கொடுக்கும். மனக்கவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு பெருகும். உறவினர்களுடன் சின்ன கருத்து வேற்றுமை வரலாம். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதத்தை தவிர்க்கவும். பெண்கள் விவகாரங்களில் சற்று கவனமாக இருக்கவும். குடும்பத்துடன் பயணிக்க விருப்பம் ஏற்படும். உங்களுக்கு எதிராக வரும் தடைகளை தகர்த்தெறிய முடியும். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிப்படவும்.
விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் உள்ள எல்லா காரியங்களையும் சிறப்பான முறையில் செய்து முடிக்க முடியும். பிரபலங்களின் தொடர்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். குடும்ப நலனில் கூடுதல் கவனம் தேவை. அடுத்தவரின் கருத்துக்கு செவி சாய்க்க வேண்டாம். நண்பர்கள் சிலர் விரோதமாக செயல்பட வாய்ப்புண்டு. பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். புதிய திட்டங்கள் சம்பந்தமாக பல புது நபர்களை சந்திக்க வேண்டியது இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். உங்களின் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உத்யோகத்தில் ஆதரவுப் பெருகும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்.
தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களின் அனுபவம் வாய்ந்த செயல்களால் உங்கள் வாழ்க்கை சிறப்படையும். மனதில் நினைத்த காரியம் எதுவானாலும் கைகூடும். பணவரவில் ஒரு சில தடைகள் இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். உடன்பிறப்புகளின் நலனில் அக்கறைகொள்ளவும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பண விஷயங்களில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். கொடுக்கல், வாங்கல் திருப்தியாக இருக்கும். பெரியோர்களின் ஆதரவும் ஆலோசனையும் கிடைக்கும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். பயணங்களால் அதிக நன்மை உண்டாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். புது தொழில் யோகம் அமையும்.
பரிகாரம் : வரசித்தி விநாயகரை வணங்கி வழிபடவும்.
மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தை பற்றிய கவலை இருந்து கொண்டே இருக்கும். மனதில் தெளிவு நிலை உண்டாகும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாகப் பழகுவது அவசியம். குடும்பத்தில் அவ்வப்போது லேசான சலசலப்புகள் தோன்றி மறையும். உடனிருப்பவர்களுடன் விட்டுக்கொடுத்து போகவும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனையில் சிக்கிக்கொள்ள வேண்டாம். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மிதமான இருக்கும்.
பரிகாரம் : நவக்கிரத்தை தினமும் 9 முறை வலம் வரவும்
கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் உள்ள நல்ல திட்டங்கள் செயல்படுத்த முடியும். குடும்பத்தில் தொலைந்து போன பழைய சந்தோஷம் திரும்ப கிடைக்கும். பணவரவு தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். திட்டமிட்டபடி சில காரியங்கள் நடக்காமல் இழுபறியில் இருக்கும். குடும்பத்தில் ஆனந்தமும், குதூகலமும் நிலவும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் கூடும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். உடல் ஆரோக்யத்தில் சிறு சிறு சங்கடங்கள் வரலாம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த பகைமை மாறும். எதிரிகளின் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். உறவினர்களிடம் நல்லுறவு ஏற்படும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
பரிகாரம் : ஸ்ரீ ராகவேந்திரரை வணங்கி வழிபடவும்.
மீன ராசி அன்பர்களே
மீன ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, பொருளாதார நிலை உயரும். நேர்மையான எண்ணங்களும், சிந்தனைகளும் உங்களை பெரியளவில் உயர்த்தும். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். மனசங்கடம் வராமல் தடுக்க தியானம் செய்யவும். நெடுதூர பயணங்களில் கவனம் தேவை. பெற்றோர்களின் ஆலோசனை உதவியாக இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்க முடியும். உறவினர்களால் சில நெருக்கடிகள் வரும். சொத்து பிரச்னைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். குலதெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். எதிலும் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிப்படவும்
ஏப்ரல் மாத ராசி பலன்கள் 2026
| ஏப்ரல் மாத ராசி பலன்கள் 2026 |
| விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 18ம் தேதி முதல் ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 17ம் தேதி வரை (01-04-2026 – 30-04-2026) வாக்கிய பஞ்சாங்கப்படி 01-04-2026 முதல் 30-04-2026 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே அனுபவ பூர்வ உண்மை. ஏப்ரல் 2026 மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு : ஏப்ரல் 02, 2026 – மீன செவ்வாய் ஏப்ரல் 11, 2026 – மீன புதன் ஏப்ரல் 14, 2026 – மேஷ சூரியன் ஏப்ரல் 19, 2026 – ரிஷப சுக்கிரன் ஏப்ரல் 30, 2026 – மேஷ புதன் ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஆலந்தூர் A.வினோத் குமார் Ph.d (Astrology), செல்: 9003019831 |
மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, இந்த மாதம் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எதிலும் பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பது அதிகளவில் நன்மையை தரும். பொருளாதாரத்தில் சிறிது சரிவினைச் சந்திக்க நேரலாம். குடும்ப வர செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். முன் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். குடும்ப வாழ்க்கையில் சின்னச் சின்ன பிரச்சனைகள் வந்து போகும். பிரியமானவர்களால் சில நெருக்கடிகள் வரலாம். பெரியோர்களின் ஆசி கிட்டும். சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். பெற்றோர்களின் அரவணைப்பு கிட்டும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். நண்பர்களால் சில மனக்கசப்புகள் வரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது. எதிலும் பதற்றமடையும் போக்கை கைவிட்டு நிதானமாக நடந்துகொள்ள பழகிக்கொள்ளவும். வேலையில் சிரமங்கள் வரலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : 5,6,7,8 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. குடும்ப நிதி நிலை சீரடையும். திட்டமிட்ட பயணங்களால் மகிழ்ச்சி கூடும். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். ஒரு சில உடல் உபாதைகள் அவ்வப்போது இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் கவனமாக இருக்கவும். மன குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளியிடங்களில் வார்த்தைகளை குறைத்து பேசவும். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் சில சண்டை, சச்சரவுகள் வந்து போகும். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் சேமிப்பை உயர்த்தும். உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். உறவினர்களால் சில பிரச்னையை சந்திக்கக் கூடும். கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். குடும்பத்தில் வருமானத்திற்கு மீறிய செலவுகள் இருப்பதால் அனாவசிய செலவுகளை அறவே தவிர்க்கவும். முடிந்த வரை கடன் வாங்குவதை குறைத்து கொள்ளவும். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
சந்திராஷ்டமம் : 8,9,10 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்
மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புத்தி சாதுரியத்தால் பல காரியங்களை செய்ய முடியும். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்ப இருக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை உண்டு. குலதெய்வ வழிபாடு நன்மை தரும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். குடும்ப வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். எதிர்காலம் பற்றிய பயத்தை தவிர்ப்பது நல்லது. தேக நலனில் அக்கறைகொள்ளவும். பண தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி கலகலப்பு ஏற்படும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். எதிர்பாராத வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க முடியும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம் : 10,11,12,13 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, ஆன்மீக பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். பொருளாதார நிலையில் ஏற்றம் ஏற்படும். எல்லாவகையிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். மனதில் நிலவி வந்த கவலைகள் நீங்கும். உற்றார், உறவினர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். பிரியமானவர்களால் நிறைய நன்மைகள் உண்டு. உண்டு. தொல்லை தந்தவர்கள் கூட தானாக விலகுவர். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குடும்பத்தில் வீண் விரயங்களும் மருத்துவ செலவினங்களும் உண்டு. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். திட்டமிடாத செலவுகள் நிறையவே வரும். சம்பந்தமில்லாத விஷயங்களில் அதிகம் தலையிடாமல் இருப்பது நல்லது. வாகன யோகம் உண்டு. சொந்த விஷயங்களுக்கு அடுத்தவரிடம் ஆலோசனை கேட்பதை தவிர்க்கவும். பயணங்களால் வீண் அலைச்சல் வரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். உடல் உபாதைகள் தொடர்பாக சில மருத்துவ செலவுகள் வரும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. புது வேலைக்கு முயற்சி செய்யலாம். தொழில், வியாபாரம் சிறக்கும்.
சந்திராஷ்டமம் : 13,14,15 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண வரவில் ஏற்றம் இருக்கும். எத்தனை இடையூறுகள் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு அதில் வெற்றி பெற முடியும். யாரிடத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் சில இக்கட்டான சூழல் நிலவும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வெளியூர் பயணம் செல்வதற்கான முயற்சிகள் கைக்கூடும். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். புது நண்பர்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உறுதுணையாக இருப்பர். எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் அதிக சிரமம் இருக்கும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் அவசியம். குடும்பத்தில் புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே இருந்த கருத்து ஒற்றுமை நீங்கும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். கொடுக்கல், வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 15,16,17 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்
கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். சில நேரங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். குடும்பத்தில் பணம் எவ்வளவு வந்தாலும், செலவுகளும் காத்துகொண்டு தான் இருக்கும். புத்தி சாதுர்யத்தை பயன்படுத்தி காரியங்களில் வெற்றி பெற முடியும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். பயணங்களால் தேவையற்ற செலவுகள் வரும். குடும்ப நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஓயாத அலைச்சல் காரணமாக உடல் அசதியும் சோர்வும் ஏற்படலாம். உங்களுக்கு வந்த பிரச்சனைகள் எல்லாம் பனி போல விலகி நிற்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உற்றார், உறவினர்களின் அன்பு மகிழ்ச்சியை தரும். பூர்விக சொத்துக்களால் ஒரு சில ஆதாயங்கள் கிட்டும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். குடும்ப வளர்ச்சிக்கான செலவுகள் அதிகம் இருக்கும். எதிரிகளால் பிரச்னைகள் வந்தாலும் அதை திறமையாக சமாளிக்க முடியும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
சந்திராஷ்டமம் : 17,18,19 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்
துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எந்த ஒரு பிரச்சனையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் உண்டாகும். உங்கள் திறமையை வெளிப்படுத்தும் நல்ல வாய்ப்புகள் வரும். எதிர்கால திட்டங்கள் நிறைவேறும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியம் இப்போது நடக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைக்கூடும். வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். எதிலும் மனதிருப்தியுடன் செயலாற்ற முடியும். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிக்கல் இருக்கும். உடல் சோர்வு நீங்கி, உற்சாகம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடி வரும். மனதில் இருந்த கவலை நீங்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சனைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
சந்திராஷ்டமம் : 19,20,21 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். பொருளாதார நிலை உயர்வு தருவதாக அமையும். மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும். குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். புது முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். மருத்துவச் செலவுகள் அவ்வப்போது தோன்றி மறையும். பெண்கள் வழியில் சில பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. கணவன் மனைவிடையே இணக்கமான போக்கு காணப்படும். குடும்பத்தை பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை முற்றிலும் நீங்கிவிடும். மற்றவர்களுக்காக முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். வாகன பயணங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் நல்ல ஒரு அங்கீகாரம் கிடைக்கும். புது தொழில் யோகம் அமையும்.
சந்திராஷ்டமம் : 21,22,23 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்
தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்ப விஷயங்களை மிகவும் கவனமாக கையாளுவும். எதிர்பாராத அதிர்ஷ்டமும், தன வரவுக்கும் வாய்ப்புண்டு. வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக மாறும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். வேண்டியவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர முடியும். பாலிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் அவ்வப்போது வரும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின் சீராகும். யாரிடத்திலும் வீண் வாக்கு வாதங்களால் பகையை வளர்த்து கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம் : 23,24,25 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்
மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் பழைய அமைதி திரும்பும். பொருளாதார நிலை வெளியில் சொல்லும் படி இருக்கும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். உடல் நிலையிலும், மனநிலையிலும் அதிக கவனம் செலுத்தவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். எதையும் சாதிக்கும் ஆற்றல் உருவாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்றார், உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உடல் நலம் சீராகும். வாகன பயணங்களில் கவனம் தேவை. குடும்ப விவகாரங்களில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். விலகி நின்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவர். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் ஏற்படும். பெற்றோரின் நலனில் அக்கறைகொள்ளவும். கணவன் மனைவிடையே சின்ன மனவருத்தம் ஏற்படும். வெளியில் கடனாக கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். உங்களை சுற்றி நடக்கும் விஷயங்கள் கூட சாதகமாக இருக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்ற நிலை உருவாகும்.
சந்திராஷ்டமம் : 25,26,27,28 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். மற்றவர்களுடன் பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம். திட்டமிட்டு செய்ய நினைத்த காரியம் விரைவில் முடியும். எந்த ஒரு செயலையும் முழு மனதோடு செய்தால் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழல் வரும். குடும்ப பணிகளை கவனமாக மேற்கொள்ளவும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் அவசர முடிவையும், குழப்பத்தையும் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 28,29,30 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படவும். எதையும் சுயமாக சிந்தித்து செயல்படும் திறன் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் வந்து நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தில் அவசர முடிகளை தவிர்க்கவும். முன் கோபத்தை குறைக்கவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வரவும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். புது நட்பு வட்டாரம் உருவாகும். விஐபிகளின் அறிமுகம் ஆதாயம் தரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோசமான சூழல் நிலவும். உறவினர்கள் உதவி கரம் நீட்டுவர். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். பிரியமானவர்களிடம் இணக்கமான சூழ்நிலை உருவாகும். நெடுதூர பயணங்களை தவிர்க்கவும். உங்கள் விருப்பங்களை எதுவானாலும் அதை நிறைவேற்றிக்கொள்ள இயலும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : 3,4,5 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.