இலங்கையின் இன்றைய வானிலை அறிக்கை

Sri Lanka weather report

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.12 மணியளவில் சிலாபம், விங்கிரிய, ஹல்மில்லவெவ, படுவஸ்நுவர, கொகரெல்ல, கவுடுபெலல்ல, கொப்பவெலி மற்றும் கிரான்குளம் போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 45 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

Related posts

பாதுகாப்பற்ற முறையில் தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்ததில் 6 வயது சிறுவன் உயிரிழந்தான்.

கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் இந்துக்களுக்கு ஒரு விதமான நீதியும், பௌத்தர்களுக்கு வேறொரு விதமான நீதியும் வழங்கப்படுவது எந்த விதத்தில் நியாயமானது? – தொல்லியல் அமைச்சரிடம் சாணக்கியன் கேள்வி எழுப்புகிறார்.