மாத்தளை கவுடுபெலல்ல பகுதியில், இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என்ற பெயரில் தரமற்ற கிரீம் வகைகளை வர்த்தக ரீதியில் தயாரித்த நிறுவனமொன்றை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் சனிக்கிழமை (11-04-2026) முற்றுகையிட்டனர்.
மேற்படி தயாரிப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாசனைத் திரவிய உற்பத்தித் தோட்டங்கள் வழியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தரமற்ற கிரீம் வகைகளை தயாரித்த குறித்த தொழிற்சாலை மாத்தளை கவுடுபெலல்ல பகுதியில் அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.