17.05.2025 – தமிழீழம்.
மனச்சாட்சி மரணித்த மனிதர்கள்.
சத்தியநாதன் சங்கரின்
சாவெழுதிய சரித்திரம்
இனமொன்றின் இருளகற்ற
ஈழதேசத்தில் எழுதப்பெற்றது.
தமிழன் வீரம் தலைநிமிர
தழிழீழ தாகம் மேலோங்க
தலைவன் வழி தடம்பதித்து
தனித்துவம் வளர்ந்தது.
எல்லை மீறி எங்கள் நிலத்தில்
எதிரிப்படை குகையமைக்க
தொல்லைகளால் தொலைக்கப்பட்டது
எம்மினத்தின் நின்மதி.
குனிந்து குனிந்து குந்தியிருந்து
கூணிக்குறுகி ஒடுங்கிப் பதுங்க
படுகொலைகள் நடந்தது.
பதிலடி கொடுக்க படைதிரட்டி
பாயும் புலியணி வகுத்தார்
எம் தலைவர்.
அண்ணண் எண்ணத்தை
செயலாக்கி செருக்களம்
புகுந்தாடி மடிந்தனர்
மாவீரர்….
தாய், தந்தை பாசம் பதுக்கி
தமிழன்னை மீது செலுத்தி
தமிழீழ தாகம் சொல்லி
தளராத மனதோடு
தலைசாத்துக் கொண்டார்.
வரிசைகள் நீழ
வரியுடை வீரர்
விடுதலைக்காக
விழிமூடிப்போனார்.
நித்தமும் யுத்தம்
சத்தமும் பக்கம்
இரத்தமும் தசைகளும்
எத்தனை அவலம்.
பலம்கொண்ட படை
பாரெல்லாம் துணை
பிணம்தின்னும் இனவெறி….
எம்மண்ணில் சிங்களம்
செருக்களமாடியது
புத்தனின் சத்தியம்
மீறியது….
அடங்காத அவன்
கொடுங்கோலாட்சி
தமிழினப் படுகொலையாகியது.
தனியொரு படையாகி
தமிழனின் தடையகற்றி
தரணியில் புலியணி
தரமுயர்ந்து கொண்டது
சினங்கொண்ட சிங்களம்
சிதைத்திட எண்ணி
அத்துமீறலும் அடாவடிகளும்
சீறீப் பாயும் ஏவுகனைகளும்
சிதைக்கும் விமானங்களும்
சீனதேசத்து அமிலங்களும்
கொட்டிக் கொழுத்தி
கோரப் படுகொலை செய்து முடித்தது.
மக்களைக் காத்த மறவர்களும்
மாவீரராகி மண்ணிலே மடிந்தனர்
அத்தனை வீரரின் அடயாளங்களும்
அழித்து தாய் மண்ணை அபகரித்தான்…..
புத்தனின் புதல்வர்கள்
வெற்றியின் கழிப்பில்
புதைத்தவர் புதைகுழி
தோண்டி புதுத்தரையாக்கி
புதுவீடு கட்டியும்
பாற்சோறு கொடுத்து
பகலிரவாக கொண்டாட்டம்.
ஆழும் ஆசை
மாழும் மாழும்
உங்கள் அரசும் சாயும் சாயும்
பேரினவாதம் ஓடும்.. ஓடும்.
தேசம் ஒர் நாள் மீளும் மீளும்.
நீதியற்ற இனப்படுகொலை
நடத்திவிட்டு…..
சாட்சியம் கேட்குது மனச்சாட்சி
மரணித்த மனிதம்.
ஆயுதப்போரின் மரணம்
பேரணிப் போராய்
உலகெங்கும் உயிர்பெறட்டும்
உரிமைக் குரல் ஓங்கட்டும்
எழுச்சி எங்கும் பரவட்டும்
புரட்சி புயலாக வீசட்டும்
விடுதலைகாண வழி பிறக்கட்டும்.
ஓய்வதால் சாய்வதே திண்ணம்
ஓரணி சேர்ந்தால் ஒற்றுமையுயரும்
வெற்றியும் நிச்சயம்
வெல்வதும் உறுதி.
– யாகவி.