03.06.2025 – ஆமதாபாத்.
18வது பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. 70 லீக் போட்டிகளின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், குஜராத் மற்றும் மும்பை அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
பிளே ஆப் சுற்றில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியும், பெங்களூரு அணியும் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கும் பைனலில் மோதுகிறது.
பெங்களூரு அணியை பொருத்தவரை 2009, 2011, 2016 என மூன்று சீசன்கள் இறுதிப்போட்டி வரை வந்து தோல்வியை தழுவி இருக்கிறது. தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரு அணி பைனலுக்கு வந்துள்ளது.
பஞ்சாப் அணியை பொறுத்தவரை 18 ஆண்டுகளாக பிரீமியர் தொடரில் விளையாடி வருகிறார்கள். இதில் ஒரு முறை 2014 ஆம் ஆண்டு மட்டும் தான் பைனலுக்கு தகுதி பெற்றிருக்கிறது. 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் பைனலுக்கு பஞ்சாப் அணி வந்திருக்கிறது.
முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு சால்ட் மற்றும் கோஹ்லி துவக்கம் கொடுத்தனர். 1.4 வது ஓவரில் 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து இருந்த சால்ட், ஜேமிசன் பந்தில், ஸ்ரேயாசிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
6.2 வது ஓவரில் பெங்களூரு அணி 56 ரன்கள் எடுத்து இருந்த போது 2 வது விக்கெட்டை இழந்தது. மயங்க் அகர்வால் 24 ரன்கள் எடுத்த போது, சகால் பந்துவீச்சில், அர்ஷ்தீப்பிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
10 ஓவரில் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 87 ரன் எடுத்து பெங்களூரு அணி விளையாடி வருகிறது.