லண்டன் –
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பிரிட்டனைச் சேர்ந்தவர்களுடன் லண்டனுக்கு கிளம்பிய விமானம், ஆமதாபாத்தில் நொறுங்கி விபத்துக்குள்ளானது பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. நிலைமை குறித்து தகவல் கிடைத்து வருகிறது. இந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது எனது எண்ணங்கள் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
டில்லியில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: விமான விபத்து குறித்து தகவல் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், சம்பவம் குறித்து தெரிந்து கொள்ளவும் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறோம். தூதரக உதவி தேவைப்படும் பிரிட்டன் நாட்டவர்கள் அல்லது நண்பர்களை பற்றி தெரிந்து கொள்ள 020 7008 5000 என்ற எண்ணை அழைக்கலாம் எனக்கூறியுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி: – இந்தியாவில் பயணிகள் விமான விபத்து பற்றிய பயங்கரமான செய்தி. இந்த துயரமான நாளில் பிரதமர் – நரேந்திர மோடிமற்றும் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா, இங்கிலாந்து, போர்ச்சுகல் மற்றும் கனடாவில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களுடன் துண நிற்கிறோம். இந்த துயரமான நாளில் உங்கள் அதிர்ச்சியையும் துக்கத்தையும் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். முடிந்தவரை பல உயிர்கள் காப்பாற்றப்படவும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம் என்று ஜெலன்ஸ்கி பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் : ஆமதாபாத்தில் பயணிகள் விமான விபத்து பற்றிய செய்தி மிகவும் துயரமானது. இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட அனைவருடனும் ஆஸ்திரேலியா துணை நிற்கிறது . எங்கள் அரசாங்கம் தொடர்ந்து புதுப்பிப்புகளைப் பெற்று வருகிறது, மேலும் நிலைமையை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிப்போம்.
ஈரான் துாதரகம் இரங்கல் – புதுடில்லியில் உள்ள ஈரான் தூதரகம்,ஆமதாபாத்தில் நடந்த ஒரு பயணிகள் விமான விபத்து குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தையும், மனமார்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்திய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் எங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் உள்ளன. இந்த இதயத்தை உடைக்கும் சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்துகிறோம். இந்த துயரமான தருணத்தில் நாங்கள் இந்திய மக்களுடன் நிற்கிறோம்
ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் – இந்த துயரமான விமான விபத்துடன் இந்தியாவிலிருந்து இதயத்தை உடைக்கும் செய்தி. இந்த பயங்கரமான இழப்பால் துயருறும் குடும்பங்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் வலியை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். அன்புள்ள
நரேந்திர மோடி, இந்த துயரமான தருணத்தில் ஐரோப்பா உங்களுடனும் இந்திய மக்களுடனும் ஒற்றுமையாக நிற்கிறது.