யுத்தம் முடிந்தும் மக்களின் காணிகளை விடுவிக்காது இருப்பது இன அழிப்பின் மற்றுமொருவடிவமேயாகும் இதனால்தான் அரசாங்கமும் இராணுவமும் காணிகளை விடுவிக்காது இழுத்தடிப்பு செய்துவருகிறது என அருட்தந்தை லியோ ஆம்ரோங் அடிகளார் தெரிவித்தார்.
எமது நிலம் எமக்கு வேணும் என்ற கோரிக்கையுடன் வலிகாமம் வடக்கு மயிலிட்டிமக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கையை முன்வைத்து தொடர்சியாக நான்காவது நாளாக செவ்வாய்க்கிழமை (24) போராடிவருகிறார்கள் இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இப்போராட்டம் இந்த மக்களின் அடிப்படை உரிமையை கேட்கிறார்கள் இது தமிழர்களின் குரலாக ஒலிக்கப்படுகிறது எமது நிலத்தை அபகரித்து வைத்திருப்பது என்பது இன அழிப்பின் ஒரு அடையாளமாகவே பார்கவேண்டியுள்ளது.
இது தனியே மனித உரிமை மிறல் மட்டுமல்ல இன அழிப்பின்செயற்பாடாக விளங்குவதாக நாங்கள் நோக்கவேண்டியுள்ளது .

இந்த இடத்து மக்கள் 1990 ஆண்டு முதல் வெளியேற்ரப்பட்டு 2009 ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இல் ஆலயங்களுக்கு சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்ட சூழலில் குறிப்பாக 2013 ஆம் ஆண்டு அந்த ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளது .
இது வேனையான விடயமாகும். தற்போதும் கூட ஆலயங்களுக்கு சென்று வழிபட முடியாதுள்ளது ,வாழ்விடங்களுக்கு செல்லமுடியாதுள்ளது.
தங்களது நல்லதண்ணீர் கிணறுகளில் தண்ணீர் அள்ளி குடிக்க முடியாதவர்களாக அந்த மக்கள் இருக்கிறார்கள் .இவ்வாறாக பல வேதனைகளுடன் பல மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்தும் செந்த நிலங்களில் மக்கள் வாழவிடாது அரசாங்கமும் இராணுவமும் தடுத்து வருகிறார்கள் என்றால் இதனை இன அழிப்பின் மற்றோருவடிவமாகவே பார்க்கவேண்டியுள்ளது.
இன்றைய சூழலில் மயிலிட்டியில் செந்த நிலம் வேண்டும் என்று போராடுகிறார்கள் இன்னும் சில துரம் தள்ளி சென்றால் தையிட்டியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் கட்டப்பட்ட விகாரையை அகற்றுமாறு மக்கள் போராடுகிறார்கள்.
செம்மணியில் மனித புதைகுழிகளை சர்வதேச கண்காணிப்போடு அகழ்வாராட்சி செய்யவேண்டியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது எனக்கோரியும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரியும் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இத்தகைய போராட்டங்கள் வடக்கு கிழக்கில் தான் இடம்பெற்றுவருகிறது.
யுத்தத்தால் அளித்தார்கள், காணிகளை அபகரிக்கிறார்கள் போராட்டம் செய்தால் ஒடுக்கிறார்கள் இந்தநிலை தென்னிலங்கையில் இல்லை. காரணம் தமிழ்மக்களை சிறுபான்மை யாக பார்ப்பதும் ,நாங்கள் தேசிய இனம் இல்லை என மறுப்பதாகவே நாங்கள் பார்க்கிறோம்.
மக்களின் தேவைகளோடு அவர்களின் குரலாக நாங்கள் இருக்கின்றோம் . மக்களின் கோரிக்கை நியாயமானது ,தேவையானது அவசியமானது என்றார்.