
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைபப்பு குழுவின் முந்நாள் செயற்பாட்டாளர்.
திறான்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவர்.
இன விடுதலை உணர்வாளர் திருமதி.கோகுலதாஸ் கலாஜோதி (ஜோதி) அவர்கள் இன்று (28.06.2025) காலை சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார்.
புகழ்வணக்கம்
மண்ணில் 13.07.1968
விண்ணில் 28.06.2025
காலம் சென்ற இரத்தினம் – மல்லிகாதேவி தம்பதியினரின் மகளும், காலம் சென்ற செல்வரத்தினம் – பரமேஸ்வரி தம்பதியினரின் மருமகளும் கோகுலதாஸ் (ஜெறி) அவர்களின் துணைவியும், அனோஜா, வித்யா, சூர்யா அவர்களின் தாயாரும் ஆவார்.
இவர் நீண்ட காலமாக திறான்சி தமிழ்ச்சோலையில் சங்கத் தலைவர், செயலாளர், நிர்வாகி, ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவரின் பங்களிப்பு திறான்சி தமிழ்ச்சோலைக்கும், தமிழ் சமூகத்திற்கும் அளவில்லாதது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
குடும்பத்தாரின் துயரில் நாமும் கலந்து கொள்வோம்.
விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி !!!
– திறான்சி தமிழ்ச்சோலை – திறான்சி தமிழ்ச்சங்கம்
